Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ.8.65 லட்சத்தில் டொயோட்டா யாரீஸ் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
September 3, 2019
in கார் செய்திகள்

toyota yaris

டூயல் டோன் உட்பட பல்வேறு வசதிகளை பெற்றுள்ள புதிய டொயோட்டா யாரீஸ் செடான் ரக மாடலில் பேஸ் வேரியண்ட் ஆரம்ப விலை ரூபாய் 8.65 லட்சத்தில் தொடங்குகின்றது. இது முந்தைய மாடலை விட ரூ.60,000 வரை விலை குறைவாகும்.

தொடக்க நிலை J வேரியண்டில் ஆப்ஷனல் டொயோட்டா யாரிஸ் J (O) வேரியண்ட்டின் விலை ரூ. 8.65 லட்சம் (எம்டி) மற்றும் ரூ. 9.35 லட்சம் (சிவிடி), V (O) விலை ₹ 11.97 லட்சம் (எம்டி) மற்றும் ரூ. 13.17 லட்சம் (சிவிடி), (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி). டொயோட்டா யாரிஸ் V  இப்போது டூயல் டோன் பெற்று கருப்பு மற்றும் சிவப்பு நிறத்துடன் மற்றும் புதிய டைமண்ட் கட் அலாய் வீல்களுடன் வருகிறது.

யாரீஸ் செடான் காரில் 108 hp பவரை வழங்கவல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலில் 7 வேக சிவிடி கியர்பாக்ஸ் அல்லது 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் என இரு தேர்வுகளில் கிடைக்க உள்ளது.

டொயோட்டா யாரீஸின் புதிய V வேரியண்டில் கூடுதல் வசதிகளாக பளபளப்பான கருப்பு பூச்சு (கிரில் + ஓவிஆர்எம்), பிரீமியம் லீதரெட் இருக்கை, சென்டர் கன்சோல் பாக்ஸ், ஸ்டீரியங் வீல் மற்றும் கியர் ஷீஃப்டில் கவர், மற்றும் டைமண்ட் கட் அலாய் வீல் ஆகியவற்றைப் பெற்றுள்ளது.

குறைந்த விலை வேரியண்டில் தற்போது மூன்று ஏர்பேக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது.

யாரிஸ் காரில் டிரம் பிரேக் மற்றும் டாப் மாடல்களில் நான்கு சக்கரங்களில் டிஸ்க் பிரேக், 7 ஏர்பேக்குகள் , டயர் பிரெஷர் மானிட்டெரிங், ஏபிஎஸ், இபிடி, இஎஸ்பி மற்றும் ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் ஆகியவற்றை பெற்றிருக்கின்றது.

Tags: Toyota Yarisடொயோட்டா யாரிஸ்டொயோட்டா யாரீஸ்
Previous Post

10-15 % விலை உயர்வை சந்திக்க உள்ள யமஹா பிஎஸ் 6 பைக், ஸ்கூட்டர்கள்

Next Post

பவர்ஃபுல்லான லம்போர்கினி சியன் ஹைபிரிட் கார் அறிமுகம்

Next Post

பவர்ஃபுல்லான லம்போர்கினி சியன் ஹைபிரிட் கார் அறிமுகம்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version