ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் புதிய ஜாஸ் மாடல் பெட்ரோல் என்ஜின் மட்டும் பெற்றதாக விற்பனைக்கு ரூ.7.49 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. V, VX மற்றும் ZX என மூன்று விதமான வகைகளில் கிடைக்கின்றது.
புதிய ஜாஸ் காரில் டீசல் என்ஜின் இடம் பெறவில்லை. 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 90hp பவர் மற்றும் 110 என்எம் டார்க் வழங்குகின்றது. இந்த காரில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
ஜாஸ் காரின் மேனுவல் மாடல் லிட்டருக்கு 16.6 கிமீ வரையும், சிவிடி கியர்பாக்ஸ் பெற்ற மாடல் 17.1 கிமீ வரை மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்படுள்ளது.
தோற்றத்தில் கருமை நிற கிரிலுடன் கூடிய க்ரோம் கார்னிஷ், புதிய பம்பர் எல்இடி ஹெட்லைட், எல்இடி பனி விளக்கு மற்றும் எல்இடி டெயில் லைட் என பெற்ற இந்த மாடலில் 15 அங்குல அலாய் வீல் பெற்று முற்றிலும் ஸ்போர்ட்டிவாக அமைந்துள்ளது.
இன்டிரியர் அம்சங்களில் ஒன் டச் சன் ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்மார்ட் என்ட்ரி, என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் மாடலில் பேடெல் ஷிஃபடர் உள்ளது.
ஹோண்டா ஜாஸ் விலை பட்டியல்
V MT – ரூ. 7,49,900
VX MT – ரூ. 8,09,900
ZX MT – ரூ. 8,73,900
V CVT – ரூ. 8,49,900
VX CVT – ரூ. 9,09,900
ZX CVT – ரூ. 9,73,900
வாரண்டி தொடர்பாக ஹோண்டா நிறுவனம் ஜாஸ் காருக்கு 3 வருடம் வாரண்டி அல்லது வரம்பற்ற கிமீ வழங்கப்படுகின்றது. கூடுதலாக 2 வருடம் வாரண்டி அல்லது வரம்பற்ற கிமீ வரை நீட்டிக்கப்படும் வாரண்டி வழங்குகின்றது. மூன்று வருடத்திற்கான பராமரிப்பு (30,000 கிமீ) கட்டணம் ரூ.11,670 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.