வரும் மார்ச் 17 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள புதிய கிரெட்டா எஸ்யூவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போது இன்டிரியர் ஸ்கெட்ச் டீசரை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. இரண்டு பெட்ரோல், ஒரு டீசல் என மூன்று என்ஜினை பெற்றதாக வரவுள்ளது.
தோற்ற அமைப்பினை பொறுத்தவரை முந்தைய மாடலில் இருந்து மாறபட்ட முன்புற கிரில் மற்றும் ஸ்டைலிங் ட்விக்ஸ் பெற்ற ஹெட்லைட் உடன் எல்இடி ரன்னிங் விளக்கு மற்றும் நேர்த்தியான ஏர்டேம் கொடுக்கப்பட்டுள்ளது.
சீன சந்தையில் கிடைக்கின்ற ஐஎக்ஸ்25 காரிலிருந்து மாறுபட்ட அம்சத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் வெளியாக உள்ள புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடல் புதிய ஸ்டீயரிங் கொண்டு முற்றிலும் மாறுபட்ட டாஷ்போர்டு வடிவமைப்பைப் பெறுகிறது. இந்த ஸ்டீயரிங்கில் ஆடியோ, புளூடூத் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் கட்டுப்பாடுகளைப் பெறுகிறது. ஏசி வென்ட்களுக்குக் கீழே வைக்கப்பட்டுள்ள பெரிய 10.25 அங்குல இன்போடெயின்மென்ட் திரையுடன் இந்த கார் முழு டிஜிட்டல் கிளஸ்டரை பெறுவதுடன், இதில் ப்ளூலிங்க் கனெக்ட்டிவிட்டி வசதியை பெறுகின்றது. எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்குடன் குளிரூட்டப்பட்ட இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 138 bhp பவர் மற்றும் 242 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். ஜிடிஐ டர்போ என்ஜின் 9.7 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டுகிறது. மேலும், 16.1 கிமீ (MT) மற்றும் 16.2 கிமீ (DCT) மைலேஜ் வழங்கப்படும்.
1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி பவர் மற்றும் 144 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மைலேஜ் 16.4 கிமீ (MT) மற்றும் 16.3 கிமீ (AT). மேலும், இந்த என்ஜின் 0-100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 11.8 வினாடிகள் தேவைப்படும்.
இறுதியாக, புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வழங்குகின்றது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும். க்ரெட்டா டீசல் கார் மைலேஜ் 17.8 கிமீ (AT) மற்றும் 20.8 கிமீ (MT) ஆகும்.