பல்வேறு மாற்றங்களுடன் புத்தம் புதிய 2020 மஹிந்திரா தார் எஸ்யூவி மாடலை ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வந்த புதிய தார் மாடல் பிஎஸ்-6 என்ஜின் பெற்றதாக வரவுள்ளது.
முந்தைய மாடலை விட மிக சிறப்பான வகையில் மேம்படுத்தப்பட்டு கூடுதல் நீளம், அகலம் பெற்றதாக வரவுள்ள புதிய தார் ஆஃப் ரோடர் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட், அகலமான செங்குத்தான 7 கோடுகளை பெற்ற கிரில், புதிய அலாய் வீல் போன்றவற்றுடன் மிக நேர்த்தியான முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட இன்டிரியரை பெற்று குறிப்பாக தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அம்சங்களை பெற்றதாக வரவுள்ளது.
காரில் இப்போது இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உட்பட பல்வேறு பாதுகாப்பு சார்ந்த வசதிகளுடன், மேற்கூறையில் சாஃப்ட் டாப் மற்றும் ஹார்ட் டாப் என இரு விதமான பாடி ஆப்ஷனை பெற உள்ளது.
2020 மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் எம்ஸ்டால்லின் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் எம்-ஹாக் டீசல் என இரண்டு என்ஜின் ஆப்ஷனுடன் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்றிருக்கும். புதிய தார் காரின் முன்பதிவு, டெஸ்ட் டிரைவ் மற்றும் விற்பனைக்கு வெளியிடப்படும் தேதி தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
உதவி – team-bhp