Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2020 ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
May 26, 2020
in கார் செய்திகள்

ஸ்போர்ட் லைன் மற்றும் எல்&கே என இரு வேரியண்டுகளை பெற்ற புதிய 2020 ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் ஆடம்பர செடான் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு ரூ.29.99 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

முந்தைய மாடலை விட ரூ.4 லட்சம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ள புதிய சூப்பர்ப் காரில் உள்ள 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் TSI அதிகபட்சமாக 190 ஹெச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. முன்பாக விற்பனை செய்யப்பட்ட மாடலில் 1.8 லிட்டர் பெற்று இதனை விட 10 ஹெச்பி பவர் மற்றும் 70 என்எம் டார்க் குறைவாக வெளிப்படுத்தி வந்தது.

புதிய சூப்பர்ப் காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 239 கிமீ ஆகவும், 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.7 விநாடிகளை எடுத்துக் கொள்ளும். இந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 15.10 கிமீ கிடைக்கலாம்.

முந்தைய மாடலை விட தோற்ற அமைப்பில் குறிப்பாக முன்புற கிரில், பம்பர், புதிய எல்இடி ஹெட்லைட், பின்புற பம்பர், புதிய வடிவ 17 அங்குல அலாய் வீல் மற்றும் கூடுதலான குரோம் பாகங்களை கொண்டுள்ளது.  இந்த மாடலின் ஸ்போர்ட் லைன் வேரியண்ட் ஸ்டீல் கிரே, ரேஸ் ப்ளூ மற்றும் மூன் வைட் என மூன்று வண்ணங்களில் வழங்கப்படுகிறது. Laurin & Klement (L&K) வேரியண்டில் பிசினஸ் கிரே, மூன் ஒயிட், லாவா ப்ளூ, மேஜிக் பிளாக் மற்றும் மேக்னடிக் பிரவுன் என ஐந்து வண்ணங்களில் வந்துள்ளது.

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களைப் பொறுத்தவரை 8 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, உட்பட இஎஸ்சி , ரியர் பார்க்கிங் சென்சார், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் ஹீல் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்றவற்றை பெற்றுள்ளது.

2020 ஸ்கோடா சூப்பர்ப் விலை

Sportline – ரூ.. 29.99 லட்சம்
L&K – ரூ.. 32.99 லட்சம்
(விற்பனையக விலை இந்தியா)

Tags: Skoda Superbஸ்கோடா சூப்பர்ப்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version