Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

இந்தியாவில் 2023 பிஎம்டபிள்யூ X5 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகமானது

by automobiletamilan
July 15, 2023
in கார் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

x5 suv

பிஎம்டபிள்யூ நிறுவனம் வெளியிட்டுள்ள மேம்படுத்தப்பட்ட X5 எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.93.90 லட்சம் முதல் துவங்கி அதிகபட்சமாக ரூ.1.07 கோடி வரை நிர்னையம் செய்யப்பட்டுள்ளது.

எக்ஸ்5 காரில்  48V ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனை கொண்டுள்ளது. இரண்டிலும் பொதுவாக 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

BMW X5 Facelift

பிஎம்டபிள்யூ X5 ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரில்  பெட்ரோல் மற்றும் டீசல் பவர் என இரண்டும் கிடைக்கும், மேலும், 48V மைல்ட்-ஹைப்ரிட் அமைப்பை பெற்ற இரு என்ஜின்களில் முதலில் xDrive 40i பதிப்பு 3.0-லிட்டர், ஆறு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 381hp மற்றும் 520Nm டார்க் வழங்குகின்றது. பெட்ரோல் எஞ்சின் 0-100 கிமீ வேகத்தை எட்ட 5.4 வினாடிகளில் போதுமானது. இதன் டாப் ஸ்பீடு 250kph ஆக உள்ளது.

அடுத்தப்படியாக, xDrive 30d 3.0-லிட்டர்,ஆறு சிலிண்டர் டீசல் என்ஜின் பவர் 286hp மற்றும் 650Nm டார்க் வழங்குகின்றது. 0-100 கிமீ வேகத்தை எட்ட 6.1 வினாடிகளில் போதுமானது. இதன் டாப் ஸ்பீடு 233kph ஆக உள்ளது.

இரண்டு என்ஜின்களும் 12hp மற்றும் 200Nm டார்க்கை உற்பத்தி செய்யும் மின்சார மோட்டார் கூடுதலாக பெற்று எட்டு வேக தானியங்கி கியர்பாக்ஸ் பெறுகின்றன.

இன்டிரியரில் புதுப்பிக்கப்பட்ட X5 ஃபேஸ்லிஃப்ட் காரில் 14.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் (BMW iDrive 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம்) மற்றும் 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

புதிய எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டு, 21-இன்ச் அலாய் வீல் வடிவமைப்பைத் தவிர வேறு எதுவும் மாறவில்லை. பின்புறத்திலும், X5 ஃபேஸ்லிஃப்ட்டில் உள்ள ஒரே மாற்றம் புதிய டெயில்-லைட்கள் மட்டுமே ஆகும்.

BMW X5 FACELIFT PRICE (EX-SHOWROOM, INDIA)
TrimPrice
xDrive 40i xLine₹ 93.90  லட்சம்
xDrive 30d xLine₹ 95.90 லட்சம்
xDrive 40i M Sport₹ 1.05 கோடி
xDrive 30d M Sport₹ 1.07 கோடி

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ X5 காருக்கு போட்டியாக, மெர்சிடிஸ் பென்ஸ் GLE, லேண்ட் ரோவர் டிஸ்கவரி, லெக்சஸ் RX மற்றும் வால்வோ XC90 ஆகியவை உள்ளது.

bmw x5 suv

Tags: BMW X5
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan