விரைவில் 2023 கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

புதுப்பிக்கப்பட்ட 2023 புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் அறிமுகம் குறித்த முக்கிய தகவல் இந்நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலின் என்ஜினில் மாற்றமில்லாமல் கூடுதல் வசதிகளை பெற்றதாக விளங்கலாம்.

சமீபத்தில் செல்டோஸ் எஸ்யூவி இந்திய சந்தையில் 5,00,000 இலக்கை வெற்றிகரமாக கடந்த சாதனை படைத்திருந்தது.

2023 Kia Seltos Facelift

இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், வரவிருக்கும் ஹோண்டா எலிவேட், மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆகியவற்றை செல்டோஸ் எதிர்கொள்ளுகின்றது.

2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சில வெளிப்புற தோற்ற வடிவமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றிருக்கும். குறிப்பாக, ஒருங்கிணைந்த ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் கொண்டிருக்கும். பெரிய மற்றும் அகலமான வடிவமைப்பில் பெற்ற புதிய முன் கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பக்க பம்பர், புதிய ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் பின்புறத்தில் இணைக்கப்பட்ட எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் புதிய பின்புற பம்பர் பெறலாம்.

தற்பொழுது செல்டோஸ் ஒரு ஒற்றை பேன் சன்ரூஃப்க்கு மாற்றாக இப்போது ஒரு பனோரமிக் சன்ரூஃப் பெறுகிறது.

இன்டிரியரில், 10.25 அங்குல இரு பிரிவு பெற்ற டிஸ்பிளேவுடன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியுடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை பெற்றுள்ளது. எலக்டரிக் அட்ஜெஸ்டபிள் முன் இருக்கைகள், பின்புற ஏசி வென்ட்கள், தானியங்கி ஏசி கட்டுப்பாடு, க்ரூஸ் கட்டுப்பாடு, இயங்கும் டெயில்கேட் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை பெற்றிருக்கும்.

புதிய 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 138 bhp மற்றும் 242 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

இந்த என்ஜின் 9.7 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும், குறிப்பாக இந்த என்ஜின் ஜிடி லைன் தொடரில் மட்டும் கிடைக்க உள்ளது.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம்  டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த என்ஜின் 0-100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 11.8 வினாடிகளில் எடுத்துக் கொள்ளும்.

இறுதியாக, புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும்.

நாளை டீசர் வெளியிடப்படலாம் அல்லது 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வெளியாகலாம்.

Share
Tags: Kia Seltos