கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் மாடலாக இந்தியாவில் வெளியிடப்பட்ட செல்டோஸ் எஸ்யூவி வெற்றிகரமாக இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்நிறுவனத்துக்கு சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட செல்டோஸ் தொடர்ந்து சிறப்பான வரவேற்பினை பெற்று 5,00,000 இலக்கை கடந்திருப்பதுடன், இந்நிறுவனத்தின் இந்திய விற்பனையில் 55 விழுக்காடு உள்ளது.
Kia Seltos
கொரிய கார் தயாரிப்பாளரான கியா மோட்டார்சின் செல்டோஸ் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட்ட 46 மாதங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்துள்ளது. தற்போது, நடுத்தர அளவிலான எஸ்யூவி சந்தையில் ரூ.10.89 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆரம்ப விலையில் துவங்குகின்றது.
மாதந்தோறும் சராசரியாக 9,000 விற்பனை எண்ணிக்கையை செல்டோஸ் பதிவு செய்து வருகின்றது.
செல்டோஸ் சர்வதேச சந்தைகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பிடத்தக்க ஏற்றுமதி எண்ணிக்கை 1,35,885 ஆக பதிவு செய்துள்ளது. மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, மத்திய & தென் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியம் போன்ற பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
கியா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டே-ஜின் பார்க் கூறுகையில், “செல்டோஸின் வெற்றி அசாதாரணமான ஒரு கொண்டாட்டமாகும். செல்டோஸ் மூலம், 5,00,000க்கும் அதிகமான மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.