சமூக வலைதளங்களில் எம்ஜி மோட்டார் வெளியிட்டுள்ள டீசரின் மூலம் 2023 ஆம் ஆண்டிற்கான ஆஸ்டர் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு கூடுதல் டெக் சார்ந்த நுட்பங்களை பெற்றதாக விற்பனைக்கு வரவிருக்கின்றது.
ஏற்கேனவே பல்வேறு தொழில்நுட்ப சார்ந்த வசதிகளை பெற்றுள்ள ஆஸ்டர் காரில் கூடுதலாக சில வசதிகளும், மேம்பட்ட டிசைன் அம்சங்களை மட்டும் கொண்டிருக்கலாம்.
2023 MG Astor
என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இருக்ககாது. தொடர்ந்து, 1.5 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என இரண்டு விதமான என்ஜின் தேர்வுகளை பெற்றுள்ள எம்ஜி ஆஸ்டர் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் பெற்று அதிகபட்சமாக 108bhp பவர் மற்றும் 144Nm டார்க் வெளிப்படுத்தும்.
அடுத்ததாக, டாப் 1.3 லிட்டர் டர்போ மாடல் 138bhp மற்றும் 220Nm டார்க் வெளியிடும் வகையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் பெற்றிருக்கும்.
2023 எம்ஜி ஆஸ்டர் மாடலில், பெரிய 14 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெறுவமற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, ஆஸ்டரின் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் புதிய மென்பொருள் மற்றும் கிராபிக்ஸ் மூலம் புதுப்பிக்கப்படலாம்.
ஆஸ்டர் எஸ்யூவியில் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்டில் உள்ள வசதிகளான புத்திசாலித்தனமான டர்ன் இண்டிகேட்டர்கள், ஆட்டோ கார் லாக்/திறத்தல், இயங்கும் டெயில்கேட் மற்றும் குரல் கட்டளைகளுடன் எட்டு வண்ண சுற்றுப்புற விளக்குகள் ஆகியவை பெறக்கூடும்.
பனோரமிக் சன்ரூஃப், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆறு ஏர்பேக், 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹெட்லேம்ப், ரெயின் சென்சிங் வைப்பர்கள், AI மூலம் இயங்கும் உதவியாளர் மற்றும் லெவல் 2 ADAS தொகுப்பு ஆகியவற்றைப் பெறுகிறது.