புதிய டாடா நெக்ஸான்.ev எஸ்யூவி மாடல் மிக சிறப்பான டிசைன் மாற்றங்களை பெற்று கூடுதல் ரேஞ்சு வெளிப்படுத்தும் வகையில் மேம்பட்டு நவீனத்துவமான மாற்றங்களை மோட்டார் மற்றும் பேட்டரி பெற்றதாக அமைந்துள்ளது.
மீடியம் ரேஞ்சு மற்றும் லாங் ரேஞ்சு என வந்துள்ள நெக்ஸானின் ரேஞ்சு 325 கிலோ மீட்டர் மற்றும் 465 கிமீ வெளிப்படுத்தும் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 6 ஏர்பேக்குகளை அடிப்படையாக கொண்டதாக வந்துள்ளது.
2023 Tata Nexon.ev
புதிய டாடா நெக்ஸான்.இவி எஸ்யூவி மாடலில் LR (Long Range) வேரியண்டுகளில் காரின் பவர் 142 bhp மற்றும் 215Nm டார்க் வழங்குகின்ற மின்சார மோட்டாருக்கு 40.5kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 465 கிமீ பயணிக்கலாம்.
Medium Range (MR) வேரியண்டில் 30 KWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 128 ஹெச்பி பவர் மற்றும் 215 Nm டார்க் வெளிப்படுத்தும். 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.5 விநாடிகளும், 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.9 விநாடிகளில் எட்டிவிடும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 325 கிமீ ரேஞ்சு தரவல்லதாக ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நெக்ஸான்.இவி டாப் ஸ்பீடு 150KMPH ஆக உள்ளது.
அடிப்படையாக பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இஎஸ்பி, ISOFix இருக்கை, 360 டிகிரி கேமரா மானிட்டர், சீட் பெல்ட் ரிமைன்டர், பார்க்கிங் அசிஸ்ட், பிளைன்ட் வியூ மானிட்டர், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரெஷர் மானிட்டர் வசதிகளுடன் வந்துள்ளது.
அடுத்து, மிக முக்கியமாக டாடா நெக்ஸான்.இவி காரில் V2L எனப்படுகின்ற முறையில் பவர் பெற 3.3 KVA இயலும், V2V என்ற முறையில் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்தை சார்ஜ் செய்ய 5 KVA பெற இயலும்.
ரூ.21,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டு முன்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதியும், விற்பனைக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்படலாம்.