வின்ஃபாஸ்ட் VF3 எலக்ட்ரிக் காரின் முக்கிய சிறப்புகள்

Vinfast VF3

தமிழ்நாட்டில் தொழிற்சாலையை துவங்க உள்ள வினஃபாஸ்ட் நிறுவனத்தின் VF3 எலக்ட்ரிக் காரை தனது சொந்த நாடான வியட்நாமில் வெளியிட்டுள்ளது. முன்பதிவு துவங்கப்பட்ட 66 மணி நேரத்தில் 27, 469 முன்பதிவுகளை பெற்றுள்ளது குறிப்பாக இந்த முன்பதிவு கட்டணமாக திரும்ப வழங்கப்படாத முறையில் வசூலிக்கப்படுகின்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலை துவங்கும் வின்ஃபாஸ்ட் ஆரம்பகட்ட பணிகளை துவக்கி உள்ள இந்த நிறுவனம், இந்தியாவில் ரூபாய் 16,000 கோடி முதலீட்டை மேற்கொள்ள உள்ளது. முதற்கட்டமாக ஆண்டுக்கு 50,000 வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கின்ற இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

மூன்று கதவுகளை பெற்றுள்ள VF3 எலக்ட்ரிக் காரின் நீளம் 3190மிமீ அகலம் 1679 மிமீ மற்றும் உயரம் 1623 மிமீ கொண்டுள்ள மாடலில்  32 kW பவர் மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற காரில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 205 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 இருக்கை கொண்ட வின்ஃபாஸ்ட் விஎஃப்3 மாடலில் 10 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்ட வசதிகளுடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களையும் பெறுகின்றது.

வியட்நாம் சந்தையில் வெளியிடப்பட்டுள்ள VF3 விலை 235 million VND ( தோராயமாக ரூ. 7.7 லட்சம்) ஆகும். இந்திய சந்தைக்கு 2025 ஆம் ஆண்டு மத்தியில் இந்த மாடல் விற்பனைக்கு வரக்கூடும்.

vinfast vf3 electric car vinfast vf3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *