• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2023 டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகமானது

by MR.Durai
7 October 2023, 9:31 am
in Car News
0
ShareTweetSend

tata harrier

5 இருக்கை பெற்ற ஹாரியர் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படுகின்றது. புதிய ஹாரியர் முந்தைய மாடலை விட மேம்பட்ட டிசைன் அம்சத்துடன் நவீனத்துவமான இன்டிரியரை கொண்டுள்ளது.

7 இருக்கை பெற்ற டாடா சஃபாரி எஸ்யூவி மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை தொடர்ந்து ஹாரியரும் வந்துள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பாக  நெக்ஸான் மற்றும் நெக்ஸான்.இவி என இரு மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டது.

2023 Tata Harrier

ஹாரியர் மற்றும் சஃபாரி என இரண்டு எஸ்யூவி காரிலும் பொதுவாக 170 hp பவர் மற்றும் 350Nm டார்க் வழங்கும் 2.0-லிட்டர் Kyrotec 4 சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு-வேக மேனுவல் அல்லது ஆறு-வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது. மேலும் ஃபிரன்ட் வீல் டிரைவ் கொண்ட மாடலில் டெர்ரியன் ரெஸ்பான்ஸ் மோட் (Normal, Rough & wet), மற்றும் (Eco, City & Sports) என டிரைவிங் மோடுகளையும் பெறுகின்றது.

டாடா ஹாரியர் எஸ்யூவி புதுப்பிக்கப்பட்ட முன்புற கிரில், பம்பர் இரு பிரிவுகளை பெற்ற எல்இடி ஹெட்லைட் கொண்டதாக அமைந்திருக்கலாம். மிக நேர்த்தியான எல்இடி பார் லைட் பானெட்டில் கொடுக்கப்பட்டிருக்கும். பக்கவாட்டில் மிகப் பெரிய மாற்றங்கள் இல்லாமல், புதிய 19 அங்குல அலாய் வீல் பெற்று, பின்புறத்தில் புதுபிக்கப்பட்ட பம்பர் , புதிய எல்இடி டெயில் லைட் கொண்டுள்ளது.

harrier suv

இன்டிரியர் அமைப்பில் இரண்டு கார்களும் ஒரே மாதிரியாக பகிர்ந்து கொண்டாலும், பாடி நிறத்திற்கு ஏற்ற டிசைன் இன்ஷர்ட்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது. மத்தியில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் ஃப்ரீ-ஸ்டாண்டிங் முறையில் வழங்கப்பட்டு பேஸ் வேரியண்டில் 10.25-இன்ச் மற்றும் டாப் வேரியண்டுகளில் 12.3-இன்ச் ஆக உள்ளது.

தொடுதல் மூலம் செயல்படுகின்ற HVAC சுவிட்சுகள் கொண்டு 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு மிக நேர்த்தியாக உள்ளது. பல்வேறு வசதிகளை வழங்கும் கிளஸ்ட்டர் உள்ளது. மற்ற வசதிகளில், வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப், 10-ஸ்பீக்கர் ஜேபிஎல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் மாடலுக்கு க்விக் ஷிஃப்டர், பின்புற சாளர சன்ஷேடுகள் உள்ளன.

அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களில் டாடா சஃபாரி காரில் 360 டிகிரி கேமரா, மற்றும் ADAS சூட் ஆகியவையும் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது 7 ஏர்பேக்குகளைப் பெறும் நிலையில் பொதுவாக இனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக் உள்ளன.

2024 Tata Harrier suv Interior 2024 Tata Harrier suv Rear

Tata Harrier

Related Motor News

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

பெட்ரோல் சஃபாரி, ஹாரியர் அறிமுகத்திற்கு தயாரான டாடா மோட்டார்ஸ்

டாடாவின் ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் அறிமுகமா.!

ஜிஎஸ்டி எதிரொலி., ரூ.1.55 லட்சம் வரை விலை குறையும் டாடா கார்கள்

2025 டாடா ஹாரியர் அட்வென்ச்சர் X விற்பனைக்கு வெளியானது

ரூ.25.09 லட்சத்தில் வெளியான டாடா ஹாரியர், சஃபாரி ஸ்டெல்த் எடிசன் விபரம்.!

Tags: Tata Harrier
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan