Automobile Tamilan

அக்டோபர் 17.., டாடா சஃபாரி, ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது

2023 tata harrier

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சஃபாரி மற்றும் ஹாரியர் என இரண்டு எஸ்யூவி மாடல்களை விற்பனைக்கு அக்டோபர் 17 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ளது. 5 மற்றும் 6, 7 இருக்கை ஆப்ஷனை பெற்றதாக உள்ளது. தொடர்ந்து என்ஜின் ஆப்ஷனில் மாற்றமில்லாமல் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டு ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது.

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நெக்ஸான் மற்றும் நெக்ஸான்.இவி என இரண்டும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

Tata Safari and Harrier

ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி காரில் 3,750 rpm-ல் அதிகபட்சமாக 170 hp பவர் மற்றும் 1,750-2,500 rpm-ல் 350Nm டார்க் வழங்கும் 2.0 லிட்டர் Kyrotec 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜினில் 6 வேக மேனுவல் அல்லது 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.

மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற ஹாரியர் 16.80kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் 14.60kmpl வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து, மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற சஃபாரி 16.30kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற சஃபாரி 14.50kmpl வெளிப்படுத்துகின்றது.

வரும் அக்டோபர் 17 ஆம் தேதி இரண்டு எஸ்யூவி மாடல்களின் விலை அறிவிக்கப்பட உள்ளது.

Exit mobile version