Categories: Car News

ADAS நுட்பத்துடன் 2024 கியா சொனெட் எஸ்யூவி டிசம்பர் 14 அறிமுகம்

kia sonet fr

இந்தியாவில் கியா மோட்டார்ஸ் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியிட உள்ள சொனெட் எஸ்யூவி மாடல் மேம்படுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் பல்வேறு டிசைன் மாற்றங்களுடன் ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

ஹூண்டாய் நிறுவன வென்யூ மற்றும் கியா சொனெட் இரண்டு ஒரே பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொண்டுள்ள நிலையில் வென்யூ காரில் அதிநவீன டிரைவர் உதவி அமைப்பு உள்ளது.

2024 Kia Sonet

கியா சொனெட்டில் தொடர்ந்து மூன்று என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இருக்காது.  83hp பவர் வழங்குகின்ற 1.2-லிட்டர் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜினில் , 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

120hp பவர் மற்றும் 172 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் T- GDi டர்போ பெட்ரோல் என்ஜின் 6 வேக ஐஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் 7 வேக டிசிடி மட்டுமே பெறுகின்றது.

1.5 லிட்டர் CRDi டீசல் என்ஜின் கொண்ட 116 hp பவர் மற்றும் 240 Nm டார்க் வழங்குவதுடன் fixed-geometry-turbo நுட்பத்தை கொண்டு 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது மற்றும் 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மாடல் உள்ளது.

முன்புற பம்பர் அமைப்பில் GT Line மற்றும் HT Line என இரண்டும் சில வித்தியாசமான மாறுதல்களை பெற்று புதிய எல்இடி ரன்னிங் விளக்குடன் ஹெட்லைட் பெற்றிருக்கும். மற்றபடி, பக்கவாட்டில் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பிலை. பின்புறத்தில் பம்பர் மற்றும் எல்இடி லைட்டுகளில் சிறிய மாறுதல்கள் உள்ளன. அடிப்படையான 6 ஏர்பேக்குகள் மற்றும் ADAS பாதுகாப்பு தொகுப்பினை நிரந்தர வசதியாக சேர்க்கப்படலாம்.

டிசம்பர் மாத 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய 2024 கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அடுத்த ஆண்டின் முதல் வாரத்தில் விலை அறிவிக்கப்படுவதுடன் டெலிவரியும் துவங்கப்படலாம். சொனெட் போட்டியாளர்களாக டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூநிசான் மேக்னைட், ரெனோ கிகர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ், வரவிருக்கும் டொயோட்டா டைசோர் ஆகியவை உள்ளன.