மஹிந்திரா XUV700

மிகவும் கவர்ச்சிகரமான எஸ்யூவி மாடலாக இந்திய சந்தையில் உள்ள மஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு ரூ.13.99 லட்சம் முதல் ரூ.26.99 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கின்றது.

2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் என இருவிதமான ஆப்ஷனை பெற்று 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது.

2024 Mahindra XUV700

6 இருக்கை பெற்ற கேப்டன் சீட்ஸ் கொண்ட AX7 மற்றும் AX7L என இருவிதமான வேரியண்டில் காற்றோட்டமான இருக்கை, புதிய நேபோலி பிளாக் நிறத்தில் கருப்பு கூரை தண்டவாளங்கள், குரோம் இன்ஷர்ட், கருப்பு நிறத்தை பெற்று கருமை நிற அலாய் வீல் கொண்டதாக அமைந்துள்ளது. இன்டிரியரில் AX7 மற்றும் AX7L வகைகளில் டார்க் குரோம் ஏர் வென்ட்கள் மற்றும் கன்சோல் பெசல் போன்ற மேம்பாடுகள் உள்ளன.

197hp பவர் மற்றும் 380 Nm டார்க் வெளிப்படுதும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. மேனுவல் மாடல் 153 hp பவர், 420 Nm டார்க் உடன் அடுத்து 6 வேக ஆட்டோமேட்டிக் 182 hp பவர், 450 Nm டார்க் ஆனது 2.2 லிட்டர் டீசல் என்ஜின் என இருவிதமான பவர் ஆப்ஷனை கொண்டுள்ளது.

மஹிந்திரா XUV700 எஸ்யூவி காரில் Adrenox கனெக்ட்டிவிட்டி தொகுப்பு மூலம் இப்பொழுது கூடுதலாக 13 அம்சங்களைக் கொண்டுள்ளது, மொத்தம் 83 விதமான இணைக்கப்பட்ட கார் அம்சங்களைக் கொண்டு வருகிறது.

இதில் ஃபார்ம்வேர் ஓவர்-தி-ஏர் (FOTA) திறன்கள், வரவிருக்கும் சேவைத் தேவைகள் குறித்த சரியான நேரத்தில் புதுப்பிப்புகளை வழங்கும் முன்கணிப்பு அம்சம் மற்றும் வரவேற்பு செயல்படும் ‘Ask Mahindra’ வசதி அடங்கும். கூடுதலாக, M லென்ஸ் அம்சம், எஸ்யூவியில் உள்ள பட்டன்களை ஸ்கேன் செய்யவும், டெல்-டேல் லைட்களை ஸ்கேன் செய்யவும் டிரைவர்களை அனுமதிக்கிறது.

2024 மஹிந்திரா XUV700 பாதுகாப்பு சார்ந்த ADAS வசதியுடன் முன்கணிப்பு எச்சரிக்கைகள், வாகன நிலை, இருப்பிடம் சார்ந்த சேவைகள், பாதுகாப்பு, ரிமோட் செயல்பாடுகள், மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் உள்ளன.

2024 Mahindra XUV700 Price list

கீழே கொடுக்கப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை துவக்க வேரியண்ட் விலையாகும்.

  • MX – Rs 13.99 lakh
  • AX3 – Rs 16.39 lakh
  • AX5 – Rs 17.69 lakh
  • AX7 – Rs 21.29 lakh
  • AX7L – Rs 23.99 lakh

2024 மஹிந்திரா XUV700 காரின் முன்பதிவு ஜனவரி 15 முதல்  துவங்கும் நிலையில் டீலர்ஷிப்களுக்கு டெமோ கார்கள் ஜனவரி 25 முதல் கிடைக்கும். விரைவான டெலிவரிகளுக்காக, மஹிந்திரா எக்ஸ்யூவி700 உற்பத்தி திறனை மேம்படுத்தியுள்ளது.