இந்திய சந்தையில் 2024 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரவிருக்கும் புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரில் இடம்பெற உள்ள பல்வேறு வசதிகளில் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சுசூகி ஸ்விஃப்ட்டின் அடிப்படையில் இருக்கும் என்பதனால் பல்வேறு தகவல்களை தொகுப்பாக அறிந்து கொள்ளலாம்.
விற்பனையில் கிடைத்து வருகின்ற மாருதியின் ஸ்விஃப்ட் மாடலில் இடம்பெற்றிருக்கின்ற 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் நீக்கப்பட்டு புதிய மூன்று சிலிண்டர் Z12E என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
Maruti Suzuki Swift
விற்பனையில் உள்ள காரினை அடிப்படையில் பல்வேறு மாற்றங்களை சிறிய அளவில் பெற்றதாக வந்துள்ள புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரில் மிக நேர்த்தியான எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய புராஜெக்டர் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட பம்பருடன் சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்களை கொடுத்துள்ளது. தேன்கூடு வடிவத்துடன் கூடிய புதிய கிரில் மற்றும் சுசூகி லோகோ கீழ் அமைந்திருப்பதுடன், பக்கவாட்டில் உள்ள பின்புற கதவுகளுக்கு கைப்பிடி வழக்கமான இடத்தில் உள்ளது.
பின்புறத்தில் லைகீழ் சி-வடிவ பாணி டெயில் விளக்குகள் மற்றும் ஒட்டுமொத்த டெயில் விளக்குகள் வெளிப்படையான கண்ணாடி பெற்றதாக அமைந்துள்ளது.
புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பரிமாணங்கள் ஒட்டுமொத்த நீளம் 3860 mm, அகலம் 1735 mm மற்றும் உயரம் 1500 mm ஆகும் முக்கியமான வீல்பேஸ் மாற்றமில்லாமல் தொடர்ந்து 2450 mm ஆக உள்ளது.
முந்தைய மாடலை விட பரிமாணங்களில், ஒட்டுமொத்த நீளத்தில் 15 mm நீளமாகவும், உயரத்தில் 30 mm குறைவாகவும், அகலத்தின் அடிப்படையில் 40 mm குறைவாகவும் உள்ளது.
ஸ்விஃப்ட் என்ஜின்
ஹைபிரிட் ஆப்ஷனுடன் கூடிய மூன்று சிலிண்டர் Z12E பெட்ரோல் என்ஜின் பவர் மற்றும் டார்க் விபரங்கள் வெளியிடப்படவில்லை. அனேகமாக தற்பொழுது உள்ள மாடலை விட சற்று கூடுதலாக 90 hp-100 hpக்குள் பவர் மற்றும் 150NM டார்க் வெளிப்படுத்தக்கூடும். கியர்பாக்ஸ் தேர்வுகளில் சர்வதேச சந்தையில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி என இரு விதமான ஆப்ஷனை பெற உள்ளது.
இந்திய சந்தைக்கு அனேகமாக 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்படுமா அல்லது சிவிடி வழங்கப்படுமா எனபது குறித்து இப்பொழுது எந்த உறுதியான தகவல் இல்லை.
புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட், காரின் மைலேஜ் 23.40kmpl (ஹைபிரிட் அல்லாத மாடல்) மற்றும் 24.50kmpl (ஹைபிரிட் உடன் சிவிடி கியர்பாக்ஸ்) மைலேஜ் தரும் என சுசூகி குறிப்பிட்டுள்ளது. இந்திய சந்தையில் உள்ள மாடல் விட சராசரியாக லிட்டருக்கு 1 கிமீ முதல் 1.95 கிமீ வரை மைலேஜ் அதிகரித்துள்ளது.
ஸ்விஃப்டில் புதிய வசதிகள்
மாருதி ஸ்விஃப்ட் இன்டிரியரில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிகளை ஆதிரிக்கும் வகையிலான 9 அங்குல தொடுதிரை ஃபீரீ ஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, அனலாக் முறையிலான டயல் பெற்ற MID டிஸ்ப்ளேவைப் பெறுகிறது மற்ற அம்சங்களில், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட பட்டன்கள், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி ஆகியவை அடங்கும்.
குறிப்பாக சர்வதேச மாடலில் ADAS பாதுகாப்பு தொகுப்பு பெற உள்ள நிலையில், இந்திய சந்தைக்கு இந்த அம்சம் இடம்பெற வாய்ப்பில்லை. மற்றபடி, அடிப்படையான பாதுகாப்பில் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 6 ஏர்பேக்குகள் வழங்குவதன் மூலம் பாதுகாப்பை அதிகரிக்கலாம்.
புதிய மாருதி ஸ்விஃப்ட் விலை
இந்திய சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்ற ஹேட்ச்பேக் கார்களில் ஸ்விஃப்ட் முதன்மையாக விளங்குகின்றது. 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்ற புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை ரூ.6.30 லட்சத்துக்குள் துவங்கலாம்.