ரூ.10 லட்சத்திற்குள் நகர பயன்பாட்டிற்கு ஏற்ற எம்ஜி காமெட் EV காரில் சிறிய மேம்பாடுகளை பெற்று ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 2025 ஆம் ஆண்டிற்கான மாடலில் வேரியண்டின் பெயர்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
2025 MG Comet EV
சில வாரங்களுக்கு முன்பாக காமெட் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து Pace, Play மற்றும் Plush என்ற வேரியண்டின் பெயர்கள் மாற்றப்பட்டு தற்பொழுது Executive, Excite மற்றும் Exclusive என பெயரிடப்பட்டு கூடுதலாக Excite FC, Exclusive FC வேரியண்டுகள் 7.4kW AC விரைவு சார்ஜிங் வசதியை பெறுகின்றது.
விற்பனைக்கு வெளியிடப்பட்ட பொழுது 3.3kW AC சார்ஜிங் ஆப்ஷன் மட்டுமே பெற்றிருந்த நிலையில் சார்ஜிங் நேரம் 0-100 % பெற 7 மணி நேரமும், 0-80 % பெற 5.5 மணி நேரமும் எடுத்துக் கொள்ளுகின்றது.
புதியதாக சேர்க்கப்பட்டுள்ள 7.4kW AC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனை பெறுகின்ற வேரியண்டுகளின் சார்ஜிங் நேரம் 0-100 % பெற 3.5 மணி நேரமும், 0-80 % பெற 2.8 மணி நேரமும், 10-80 % பெறுவதற்கு 2.5 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும் என எம்ஜி மோட்டார் உறுதிப்படுத்தியுள்ளது.
எம்ஜி Comet EV நுட்பவிபரங்கள்
3 கதவுகளை பெற்ற 4 இருக்கைகளுடன் 42 PS பவர், 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 17.3 kWh பேட்டரி பேக் மூலம் முழுமையாக சிங்கிள் சார்ஜில் 230 கிமீ பயணிக்கின்ற வரம்பை கொண்டுள்ளது. இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ ஆக உள்ள நிலையில், பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி சிட்டி பயன்பாட்டில் பொதுவாக 150-180 கிமீ வரை ரேஞ்ச் கிடைத்து வருகின்றது.
10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு உட்புறத்தில் கிரே நிறத்தை கொண்டுள்ள டேஸ்போர்டில் லேதர் சுற்றுப்பட்ட இரண்டு ஸ்போக் ஸ்டீயரிங் வீல் பெற்றுள்ளது.
காமெட் இவி காரில் IP67 பேட்டரி பேக்குடன், டூயல் ஏர்பேக், ABS உடன் EBD, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பின்புற பார்க்கிங் சென்சார், ஃபாலோ மீ ஹெட்லேம்ப், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.
MG Comet EV on road price
எம்ஜி காமெட் EV தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ரூ.7,99,970 லட்சம் முதல் ரூ.10,59,654 லட்சம் வரை விலை உள்ளது.
MG Comet EV | Ex-showroom Price | on-road Price |
---|---|---|
Comet EV Executive | ₹ 7,49,800 | ₹ 7,99,970 |
Comet EV Excite | ₹ 8,56,800 | ₹ 9,09,543 |
Comet EV Excite FC | ₹ 8,96,800 | ₹ 9,51,654 |
Comet EV Exclusive | ₹ 9,56,100 | ₹ 10,11,543 |
Comet EV Exclusive FC | ₹ 9,96,800 | ₹ 10,54,765 |
Comet EV Blackstorm | ₹ 9,99,800 | ₹ 10,59,654 |
(All price Tamil Nadu)
BAAS முறையில் வாங்கினால் ஒவ்வொரு கிமீ பயணத்துக்கும் ரூ.2.50 பைசா செலுத்த வேண்டும்
Baas MG Comet EV | Ex-showroom Price | on-road Price |
---|---|---|
Comet EV Executive | ₹ 4,99,000 | ₹ 5,31,654 |
Comet EV Excite | ₹ 6,20,300 | ₹ 6,56,843 |
Comet EV Excite FC | ₹ 6,60,300 | ₹ 7,01,254 |
Comet EV Exclusive | ₹ 7,19,100 | ₹ 7,61,543 |
Comet EV Exclusive FC | ₹ 7,60,300 | ₹ 8,04,065 |
Comet EV Blackstorm | ₹ 7,63,300 | ₹ 8,08,654 |
கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை தோராயமானதாகும்.
மேலும் படிக்க – குறைந்த விலை அதிக ரேஞ்ச் எலக்ட்ரிக் கார்கள்