Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

குறைந்த விலையில் அதிக ரேஞ்சு வழங்கும் எலக்ட்ரிக் கார்கள்

by MR.Durai
5 May 2023, 2:42 pm
in Car News
0
ShareTweetSend

best electric cars under 20 lakhs 2023 on road price list

இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற எலக்ட்ரிக் கார் மற்றும் எஸ்யூவி மாடல்களில் பிரபலமாகவும், குறைந்த விலையில் அதிகப்படியான ரேஞ்சு வழங்குகின்ற சிறந்த மாடல்களின் தொகுப்பினை அறிந்து கொள்ளலாம்.

எலக்ட்ரிக் கார்களின் ரேஞ்சு, செயல்திறன் மற்றும் சிறப்பம்சங்கள் உட்பட அனைத்து மாடல்களின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 400, டிகோர் EV, டியோகோ EV , சிட்ரோன் என ₹ 20 லட்சம் விலைக்குகள் அமைந்துள்ள மாடல்கள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளது.

tata nexon ev max dark edition

2023 Tata Nexon EV

நாட்டின் முதன்மையான எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் EV எஸ்யூவி காரில் 312 கிமீ ரேஞ்சு வழங்குகின்ற நெக்ஸான் EV Prime மற்றும் 453 கிமீ ரேஞ்சு வழங்குகின்ற நெக்ஸான் EV Max என இரு விதமாக மாறுபட்ட ரேஞ்சு கொண்டதாக கிடைக்கின்றது. கூடுதலாக டார்க் எடிசன் என்ற சிறப்பு மாடலும் விற்பனையில் உள்ளது. நெக்ஸான் EV காரின் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 14,49,000 முதல் அதிகபட்சமாக ₹ 19,54,000 வரை கிடைக்கின்றது.

Nexon EV SpecsNexon EV PrimeNexon EV Max
பேட்டரி திறன்30.2 kWh battery40.5 kWh battery
மோட்டார் பவர்129 PS143 PS
மோட்டார் டார்க்245 Nm250 Nm
Range (MIDC)312 km453 km
Real Driving Range170-210 km320-350 km
அதிகபட்ச வேகம்120 km/h120 km/h
Acceleration0-100 kmph in 9.9 seconds0-100 kmph in 9.0 seconds
சார்ஜிங் நேரம்50Kw DC FC 0-80% charge in 56 minutes

15A 0-100% charge in 15 hrs

7.2 Kw AC FC 0-80% charge in 6.5 hrs

50Kw DC FC 0-80% charge in 60 minutes

15A 10-90% charge in 9.10 hrs

2023 டாடா நெக்ஸான் EV Prime தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 15.41 லட்சம் முதல் ₹ 18.60 லட்சம் ஆகும்.

2023 டாடா நெக்ஸான் EV Max தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 17.74 லட்சம் முதல் ₹ 20.85 லட்சம் ஆகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் EV காருக்கான வாரண்டி 3 வருடம் அல்லது 1,25,000 km , பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருக்கு 8 வருடம் அல்லது 1,60,000 km வழங்கப்பட்டுள்ளது.

Mahindra EV xuv400 e1675212557710

2023 Mahindra XUV400

ரூ. 20 லட்சம் விலைக்குகள் அதிக ரேஞ்சு வழங்கும் மாடலாக விளங்குகின்ற மஹிந்திரா XUV400 எஸ்யூவி மாடலுக்கு சவாலாக நெக்ஸான் இவி விளங்குகின்றது. சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 456 கிமீ ஆக உள்ளது. EC வேரியண்டில் 34.5KWh அதிகபட்சமாக 375 கிமீ ரேஞ்சு வழங்கும், EL வேரியண்டில் 39.4KWh அதிகபட்சமாக 456 கிமீ ரேஞ்சு என இரண்டு விதமான வேரியண்டில் கிடைக்கின்றது.

XUV400 SpecsXUV400 ECXUV400 EL
பேட்டரி திறன்34.5 kWh battery39.4 kWh battery
மோட்டார் பவர்150 PS150 PS
மோட்டார் டார்க்310 Nm310 Nm
Range (MIDC)375 km456 km
Real Driving Range275-285 km320-350 km
அதிகபட்ச வேகம்150 km/h150 km/h
Acceleration0-100 kmph in 8.3 seconds0-100 kmph in 8.3 seconds
சார்ஜிங் நேரம்50Kw DC FC 0-80% charge in 50 minutes

3.3 kW AC 0-100% in 13 hrs

50Kw DC FC 0-80% charge in 50 minutes

7.2 kW AC 0-100% in 6:50 hrs

15A 0-100% charge in 13 hrs

2023 மஹிந்திரா XUV400 எஸ்யூவி தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 17.45 லட்சம் முதல் ₹ 20.80 லட்சம் வரை உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் XUV400 எலக்ட்ரிக் காருக்கான வாரண்டி 3 வருடம் அல்லது வரம்பற்ற கிமீ , பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருக்கு 8 வருடம் அல்லது 1,60,000 km வழங்கப்பட்டுள்ளது.

Citroen eC3 suv car

2023 Citoren eC3

இந்தியாவில் கிடைக்கின்ற மிக விலை குறைவான காம்பேக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான சிட்ரோன் eC3 எஸ்யூவி காரில் 29.2Kwh லித்தியம் ஐயன் பேட்டரி கொடுக்கப்பட்டு சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 320 கிமீ பயணிக்கலாம். இரண்டு விதமான வேரியண்டுகள் கிடைத்தாலும் வசதிகளில் மட்டுமே மாற்றம் உள்ளது.

Related Motor News

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

டாடா டியாகோ இவி முக்கிய சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை பட்டியல்.!

முழுமையான கருப்பு நிற எம்ஜி காமெட் EV பிளாக்ஸ்ட்ராம் அறிமுகமானது.!

பாரத் கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திராவின் மூன்று கார்கள்.!

ரூ‌13.99 லட்சத்தில் டாடா நெக்ஸான்.இவி 45Kwh பேட்டரியுடன் அறிமுகம்

BAAS திட்டத்தை காமெட் இவி, ZS EV என இரண்டுக்கும் விரிவுப்படுத்திய ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி

CitroeneC3
பேட்டரி திறன்29.2 kWh battery
மோட்டார் பவர்57 PS
மோட்டார் டார்க்143 Nm
Range (MIDC)320 km
Real Driving Range190-210 km
அதிகபட்ச வேகம்107 km/h
Acceleration0-60 kmph in 6.8 seconds
சார்ஜிங் நேரம்50Kw DC FC 10-80% charge in 57 minutes

15amp 10-100% in 10:30 hrs

2023 சிட்ரோன் eC3 எஸ்யூவி தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 12.21 லட்சம் முதல் ₹ 13.20 லட்சம் வரை கிடைக்கின்றது.

சிட்ரோன் நிறுவனம் eC3 எலக்ட்ரிக் காருக்கான வாரண்டி 3 வருடம் அல்லது 1,25,000 km , பேட்டரி பேக் 7 வருடம் அல்லது 1,40,000 km மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருக்கு 5 வருடம் அல்லது 1,00,000 km வழங்கப்பட்டுள்ளது.

tata tigor ev

2023 Tata Tigor.ev

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடுத்த எலெக்ட்ரிக் கார் மாடலான டிகோர்.ev செடானில் 26 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 315 கிமீ வரையிலான ரேஞ்சு வழங்குகின்றது. டாடா டிகோர் EV காரின் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 12.49 லட்சம் முதல் ₹ 13.75 லட்சம் வரை கிடைக்கின்றது.

டாடா மோட்டார்ஸ்Tata Tigor.ev
பேட்டரி திறன்26 kWh battery
மோட்டார் பவர்74.7 PS
மோட்டார் டார்க்170 Nm
Range (MIDC)315 km
Real Driving Range210-240 km
அதிகபட்ச வேகம்120 km/h
Acceleration0-60 kmph in 5.7 seconds
சார்ஜிங் நேரம்50Kw DC FC 10-80% charge in 59 minutes

15amp 10-100% in 9:40 hrs

2023 டாடா டிகோர் ev செடான் காரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 13.17 லட்சம் முதல் ₹ 14.48 லட்சம் வரை கிடைக்கின்றது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் எலக்ட்ரிக் காருக்கான வாரண்டி 3 வருடம் அல்லது 1,25,000 km , பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருக்கு 8 வருடம் அல்லது 1,60,000 km வழங்கப்பட்டுள்ளது.

Tiago EV Brochure

2023 Tata Tiago.ev

டியாகோ எலக்ட்ரிக் காரில் இரு விதமான பேட்டரி ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. 24 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 315 கிமீ மற்றும் 19.2 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 250 கிமீ ஆக உள்ளது. டாடா டியாகோ EV காரின் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 8.69 லட்சம் முதல் ₹ 11.99 லட்சம் வரை கிடைக்கின்றது.

 

Tata MotorsTiago.ev XE, XTTiago.ev
பேட்டரி திறன்19.2 kWh battery24 kWh battery
மோட்டார் பவர்61 PS74.7 PS
மோட்டார் டார்க்310 Nm150 Nm
Range (MIDC)250 km315 km
Real Driving Range170 km210-250 km
அதிகபட்ச வேகம்120 km/h120 km/h
Acceleration0-60 kmph in 6.2 seconds0-60 kmph in 5.7 seconds
சார்ஜிங் நேரம்50Kw DC FC 10-80% charge in 59 minutes

15amp 10-100% in 9:40 hrs

50Kw DC FC 10-80% charge in 59 minutes

15amp 10-100% in 9:40 hrs

2023 டாடா டியாகோ.ev காரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 9.12 லட்சம் முதல் ₹ 12.65 லட்சம் வரை கிடைக்கின்றது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ எலக்ட்ரிக் காருக்கான வாரண்டி 3 வருடம் அல்லது 1,25,000 km , பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருக்கு 8 வருடம் அல்லது 1,60,000 km வழங்கப்பட்டுள்ளது.

comet-gamer-edition

2023 MG Comet EV

இந்தியாவின் மிக விலை குறைவான எலக்ட்ரிக் கார் மாடலாக எம்ஜி காமெட் இவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ₹ 7.98 லட்சம் ஆகும். பவர் 42 PS மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 17.3 kWh பேட்டரி பேக் பெற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

3.3 kW சார்ஜர் வாயிலாக 10 முதல் 80% சார்ஜ் பெற 5 மணிநேரமும், 0 முதல் 100% சார்ஜ் பெற 7 மணிநேரமும்  தேவைப்படும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 230 கிமீ தொலைவு பயணிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

 

MG MotorComet EV
பேட்டரி திறன்17.3 kWh battery
மோட்டார் பவர்42 PS
மோட்டார் டார்க்110 Nm
Range (MIDC)230 km
Real Driving Range150-170 km
அதிகபட்ச வேகம்100 km/h
Acceleration0-60 kmph in 6.8 seconds
சார்ஜிங் நேரம்3.3kW 0-100 % 7 மணி நேரம்

3.3kW 10-80% 5 மணி நேரம்

2023 எம்ஜி காமெட் ev காரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 8.44 லட்சம் முதல் ₹ 10.85 லட்சம் வரை கிடைக்கும்.

last updated date – 05-05-2023

Tags: Citroen eC3Electric CarsMahindra XUV 400MG Comet EVTata Nexon EVTata Tiago EVtata tigor electric
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி eவிட்டாரா அறிமுகமானது

செப்டம்பர் 3., மாருதி சுசூகியின் இ-விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்.!

Range Rover Velar Autobiography

ரூ.89.90 லட்சத்தில் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆட்டோபையோகிராபி வெளியானது

சொகுசான பயணத்துக்கு எம்ஜி M9 விலை ஜூலை 21 வெளியாகும்

இந்தியாவில் ரூ.46.90 லட்சத்தில் புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே அறிமுகம்

2025 மாருதி சுசூகியின் பலேனோ காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகம்

6 ஏர்பேக்குடன் புதிய மாருதி சுசூகி எர்டிகா விற்பனைக்கு வெளியானது

6 இருக்கை டெஸ்லா மாடல் Y L எஸ்யூவி அறிமுகமானது

டெஸ்லா மாடல் ஓய் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை.!

ஜீப் மெர்டியன், காம்பஸ் ட்ரெயில் எடிசன் வெளியானது

கியாவின் 7 இருக்கை காரன்ஸ் கிளாவிஸ் EV காரின் முக்கிய சிறப்பம்சங்கள்

அடுத்த செய்திகள்

மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி eவிட்டாரா அறிமுகமானது

செப்டம்பர் 3., மாருதி சுசூகியின் இ-விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்.!

Range Rover Velar Autobiography

ரூ.89.90 லட்சத்தில் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆட்டோபையோகிராபி வெளியானது

எஸ்யூவி பிரிவில் மிக விரைவாக 6 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த டாடா பஞ்ச்

எஸ்யூவி பிரிவில் மிக விரைவாக 6 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த டாடா பஞ்ச்

mg m9 electric mpv

சொகுசான பயணத்துக்கு எம்ஜி M9 விலை ஜூலை 21 வெளியாகும்

2025 BMW 2 Series Gran Coupe car

இந்தியாவில் ரூ.46.90 லட்சத்தில் புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே அறிமுகம்

ரூ.1.99 லட்சத்தில் 2025 கீவே RR 300 விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.1.99 லட்சத்தில் 2025 கீவே RR 300 விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan