வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிசான் இந்தியா நிறுவனத்தின் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் புதுப்பிக்கப்பட்ட டிசைனை பெறுவதுடன் இன்டீரியர் மேம்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
முன்பக்க பானெட் மாற்றப்பட்டு, அகலமான க்ரோம் பேனலுடன் கிரில் புதுப்பிக்கப்பட்டிருப்பதுடன் ஹெட்லைட் மேம்படுத்தப்பட்டு, எல்இடி ரன்னிங் விளக்குடன் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது. பின்புறத்தில் புதிய டெயில் லைட், பம்பர் ஆகியவற்றை கொண்டுள்ளது.
இன்டீயர் தொடர்பாக வெளியிடப்பட்ட டீசரில் உள்ளதை போன்றே பழுப்பு மற்றும் கருப்பு என இரட்டை கலவையை பெற்று கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் கிளஸ்ட்டர் என பலவற்றை கொண்டிருப்பதுடன், காற்று சுத்திகரிப்பான வசதி, வயர்லெஸ் சார்ஜிங், பின்புறத்தில் ஏசி வென்ட் ஆகியற்றை கொண்டிருக்கலாம்.
மற்றபடி, தொடர்ந்து 1.0 லிட்டர் NA எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவிதமான ஆப்ஷனில் கிடைக்க உள்ளது.
புதிய மேக்னைட் மாடல் சிறப்பான கட்டுமானத்துடன் 6 ஏர்பேக்குகள், இஎஸ்பி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்களை பெற்றிருக்கலாம்.