சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி கார் பல்வேறு மேம்பாடுகளை கொண்டதாக வந்துள்ள நிலையில், இந்திய சந்தைக்கு 2024 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரக்கூடும்.
ஃபோக்ஸ்வேகனின் அதிகம் விற்பனை ஆகின்ற எஸ்யூவி மாடலாக டிகுவான் விளங்கும் நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் பிளக் இன் ஹைபிரிட் என மூன்று விதமான ஆப்ஷனை பெறுகின்றது.
2024 Volkswagen Tiguan
ஃபோக்ஸ்வேகன் அதிகாரப்பூர்வமாக விவரக்குறிப்புகளை வெளியிடவில்லை, புதிய டிகுவான் எஸ்யூவி பல்வேறு மாறுபட்ட என்ஜின் விருப்பங்களில் வழங்கப்பட உள்ளது. 1.5-லிட்டர் பெட்ரோல், 2.0-லிட்டர் பெட்ரோல், 2.0-லிட்டர் டீசல் மற்றும் 1.5-லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெயின்கள் கிடைக்க உள்ளது.
19.7 kWh பேட்டரி 100 கிலோ மீட்டர் வரை எலக்ட்ரிக் டிரைவிங் ரேஞ்சு செயல்படுத்துகிறது. மிக முக்கியமாக, பிளக்-இன் ஹைப்ரிட் மாடல் வேகமான ஏசி சார்ஜிங் மற்றும் டிசி ஃபாஸ்ட்-சார்ஜரில் இணைக்கப்படலாம். டிகுவானின் அனைத்து பதிப்புகளும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும். பிளக்-இன் ஹைப்ரிடில் 6-வேக DSG, மற்ற எல்லா என்ஜின்களிலும் 7-வேக DSG மற்றும் பேடல் ஷிஃப்டர் உடன் வருகின்றது.
டிகுவான் எஸ்யூவி காரில் பம்பரில் குரோம் பூச்சூ கொண்ட பெரிய கிரில் உள்ளது. வடிவமைப்பின் வளைவான கோடுகள் மற்றும் புதிய 20-இன்ச் அலாய் வீல் கொண்டுள்ளது. பின்புறத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட டெயில் லைட் பெறுகிறது, இது டெயில்கேட் முழுவதும் இயங்கும் கருப்பு பேனலில் உள்ளது.
காரின் இன்டிரியர் அமைப்பில், டிரைவர் ஃபோகஸ்டு பேனல் கொண்ட டேஷ்போர்டைப் பெறுகிறது. 15 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டு டிஜிட்டல் காக்பிட் உயர் ரக டிஸ்பிளே பெறுகிறது.
புதிய ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளேவும் உள்ளது. கியர் செலக்டர் ஸ்டீயரிங் வரிசையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. காரின் பூட் ஸ்பேஸ் 37 லிட்டர் அதிகரித்து 652 லிட்டராக உள்ளது.
புதிய டிகுவான் சைட் அசிஸ்ட் (லேன் சேஞ்ச் சிஸ்டம்), ஃப்ரண்ட் அசிஸ்ட் (ஆட்டோமேட்டிக் அவசர பிரேக்கிங்), லேன் அசிஸ்ட் (லேன் கீப்பிங் சிஸ்டம்) மற்றும் ரியர் வியூ (ரியர் வியூ கேமரா சிஸ்டம்) ஆகியவற்றுடன் கிடைக்கும்.