இந்தியாவில் ஏழாவது தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் செடான் ரக ஆடம்பர கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ குழுமத்தின் சென்னையில் உள்ள ஆலையில் 3 சீரிஸ் காரானது தயாரிக்கப்படுகின்றது.
இரண்டு டீசல் வேரியண்டுகள் (BMW 320d Sport மற்றும் BMW 320d Luxury Line) மற்றும் ஒரு பெட்ரோல் (BMW 330i M Sport) என மொத்தம் மூன்று வேரியண்டுகளை பெற்றதாக வந்துள்ளது.
BMW 320d Sport : ரூ. 41,40,000
BMW 320d Luxury Line : ரூ. 46,90,000
BMW 330i M Sport : ரூ. 47,90,000
(எக்ஸ்ஷோரூம் இந்தியா)
புதிய தலைமுறை 3 சீரிஸ் மாடலானது 5 மற்றும் 7 சீரிஸின் அதே கிளஸ்டர் ஆர்கிடெக்சர் (CLAR) தளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஸ்டைலிங்கைப் பொறுத்தவரை, மிக நேர்த்தியாக பெற்று 55 கிலோ வரை எடை குறைக்கப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் ஏராளமான மாற்றங்களைக் கொண்டுள்ளது. முன் L வடிவ எல்இடி ஹெட்லைட் உடன் கூடிய பகல்நேர ரனிங் விளக்குகள், பாரம்பரிய சிறுநீரக கிரில் சற்று பெரியதாக அமைந்துள்ளது. பின்புறத்தில், புதிய L வடிவ எல்இடி டெயில் விளக்குகள் கிட்டத்தட்ட செவ்வக வடிவத்தில் உள்ளன.
X5 மற்றும் X7 கார்களில் இருந்து பெறப்பட்ட இன்டிரியரை கொண்டுள்ள இந்த மாடலில் 40:20:40 என்ற விகிதத்தில் பின் இருக்கை இடவசதி வழங்கப்பட்டு, பல்வேறு நவீன வசதிகளை பெற்றுள்ளது.
பி.எம்.டபிள்யூ ட்வின்பவர் டர்போ தொழில்நுட்பம் பெற்ற, பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூ 330i இன் இரண்டு லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 258 ஹெச்பி பவர், அதிகபட்சமாக 400 என்எம் இழுவிசை 1,550 – 4,400 ஆர்பிஎம்-யில் வெளிப்படுத்துகின்றது. இந்த கார் மணிக்கு 0 -100 கிமீ வேகத்த்தை தொடுவதற்கு 5.8 வினாடிகள் போதுமானதாகும். 320d மாடலில் உள்ள இரண்டு லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின் 190 ஹெச்பி பவர், அதிகபட்சமாக 400 என்எம் டார்க்கையும் 1,750 – 2,500 ஆர்பிஎம்-யில் வெளிப்படுத்துகின்றது. இந்த கார் மணிக்கு 0 -100 கிமீ வேகத்த்தை தொடுவதற்கு 6.8 வினாடிகள் போதுமானதாகும்.
இரண்டு என்ஜின்களும் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வருகின்றன.
டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸ் கண்ட்ரோல் சுவிட்சைப் பயன்படுத்தி, டிரைவிங் நிலைமைகளுக்கு ஏற்ப வெவ்வேறு டிரைவிங் முறைகளுக்கு இடையே தேர்வு செய்ய முடியும் (ஈகோ புரோ, கம்ஃபோர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ்)
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…