ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின், 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் காரின் வசதிகள் மற்றும் நுட்ப விபரங்களை ஹோண்டா வெளியிட்டுள்ளது.
2018 ஹோண்டா அமேஸ் கார்
வருகின்ற மே 16ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புள்ள புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் காரில் மொத்தம் நான்கு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்க உள்ளது. 2018 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட அமேஸ் காருக்கு தற்போது டீலர்கள் வாயிலாக ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
விற்பனையில் உள்ள ஹோண்டா சிட்டி செடான் மற்றும் அக்கார்டு காரின் தோற்ற உந்துதலின் பெரும்பகுதியை பெற்றுள்ள அமேஸ் செடான் கார் முந்தைய மாடலை விட 5mm நீளம் அதிகரிக்கப்பட்டு 3995mm, 15mm அகலம் அதிகரிக்கப்பட்டு 1695mm மற்றும் இரு சக்கரகளுக்கு இடையிலான வீல்பேஸ் 65mm வரை நீட்டிக்கப்பட்டு 2470mm ஆக உள்ள நிலையில் காரின் உயரம் 5mm வரை குறைக்கப்பட்ட 1500mm ஆக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய கிரில் மற்றும் புதிய எல்இடி லைட் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஹெட்லைட் மற்றும் பம்பர் அமைப்பினை பெற்று குறைந்த வேரியன்ட்களான E மற்றும் S ஆகியவற்றில் 14 அங்குல ஸ்டீல் வீல், V, VX ஆகியவற்றில் 15 அங்குல அலாய் வீலை கொண்டிருக்கின்றது. இன்டிரியரில் பல்வேறு புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டு இரு வண்ண கலவையில் டிஜிப்பேட் 2.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற அம்சங்களை கொணச்டிருக்கின்றது.
ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான், மல்டி ஸ்டியரிங் வசதி, ரியர் பார்க்கிங் செனுசார், மொபைல் -வைஃபை வாயிலாக நேவிகேஷனை பெறும் வசதி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற வசதிகளை கொண்டு 420 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்டினை பெற்றுள்ளது.
ஹோண்டா அமேஸ் எஞ்சின்
முந்தைய எஞ்சின் தேர்வுகளில் மாற்றம் செய்யபடாமல் சிறப்பான வகையில் செயல்திறனை வழங்குவதுடன் அதிகபட்ச எருபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டதாக பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆகியவற்றில் கிடைக்க உள்ளது.
1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 90 ஹெச்பி ஆற்றலை வழங்குவதுடன், டீசல் எஞ்சின் 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் எஞ்சின் பெற்று 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளில் இரு எஞ்சின்களும் கிடைக்க உள்ளது.
ஹோண்டா அமேஸ் பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 19.5 கிமீ (மேனுவல்) , 19.0 கிமீ (ஆட்டோமேட்டிக்) மற்றும் அமேஸ் டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 27.8 கிமீ (மேனுவல்) 23.8 கிமீ (ஆட்டோமேட்டிக்) ஆகும்.