Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2020 ஹோண்டா சிட்டி காரின் விலை ரூ.10.89 லட்சம் முதல் ரூ.14.64 லட்சம் வரை

by automobiletamilan
July 15, 2020
in கார் செய்திகள்
  • ரூ.10.89 லட்சத்தில் ஹோண்டா சிட்டி கார் வெளியானது
  • புதிய 121 ஹெச்பி 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அறிமுகம்
  • பாதுகாப்பு சார்ந்த 6 ஏர்பேக், லேன் வாட்ச் கேமரா வசதி உள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் பல்வேறு வசதிகளை பெற்றதாக ரூ.10.89 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.14.69 லட்சம் வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு தலைமுறை சிட்டி காரின் மொத்த சர்வதேச விற்பனை எண்ணிக்கை 40 லட்சத்தையும், இந்தியாவின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 8,00,000 கடந்துள்ளது.

புதிய காரின் டிசைன் அமைப்பின் முன்புறத்தில் மிக அகலமான க்ரோம் கிரில் வழங்கப்பட்டு எல்இடி ஹெட்லைட் உடன் எல்இடி ரன்னிங் விளக்குகளும் இணைக்கபட்டுள்ளது. பக்கவாட்டு தோற்ற அமைப்பில் பெரும்பாலும் தற்போது உள்ள மாடலின் தாக்கம் இடம்பெற்றிருக்கின்றது. இந்த காரில் சிவப்பு மெட்டாலிக், வெள்ளை, ஸ்டீல் மெட்டாலிக், சில்வர் மெட்டாலிக் மற்றும் பிரவுன் மெட்டாலிக் என 6 நிறங்களை பெற்றுள்ளது.

புதிய ஹோண்டா சிட்டி கார்
புதிய ஹோண்டா சிட்டி கார் இன்டிரியர்

 

காரில் கருமை நிறத்துக்கும் முழுமையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சென்டரல் கன்சோலில் மிகவும் பெரிய தொடுதிரை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது நமது நாட்டின் மோட்டார் சந்தையில் முதன்முறையாக அலெக்ஸா ஆதரவு பெற்றதாக வந்துள்ள சிட்டி காரில் 8.0 அங்குல இன்ஃபோயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் மிக சிறப்பான ஹோண்டா கனெக்ட் எனப்படும் கனெக்ட்டிவிட்டி சார்ந்த 32 வசதிகளை வழங்குகின்றது.

7.0 டிஜிட்டல் கிளஸ்ட்டர், ஆட்டோ டிம் IRVM, எலக்ட்ரிக் சன் ரூஃப் என பல்வேறு வசதிகளுடன் பேடெல் ஷிஃப்டர், ஆம்பியன்ட் லைட்டிங், கீலெஸ் என்ட்ரி கோ மற்றும் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் போன்றவற்றை டாப் வேரியண்டில் கொண்டுள்ளது.

121 ஹெச்பி பவரை வழங்குகின்ற புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ARAI சான்றிதழ்படி மைலேஜ் லிட்டருக்கு 17.8 கிமீ (6 வேக மேனுவல்) மற்றும் 18.4 கிமீ (சிவிடி ஆட்டோ) வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

அடுத்தப்படியாக ஹோண்டா சிட்டி மாடலில் பிஎஸ்-6 முறைக்கு மாற்றப்பட்டு 100 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸூடன் வழங்கப்பட உள்ளது.

காரின் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை ஏபிஎஸ் உடன் இபிடி, ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்டு சீட்ஸ், 6 ஏர்பேக்குகள், லேன் வாட்ச் கேமரா மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்டவை அமைந்துள்ளது.

புதிய ஹோண்டா சிட்டி கார் விலை பட்டியல்

Model V VX ZX
1.5-Litre Petrol MT ரூ.10.89 லட்சம் ரூ.12.25 Lakh ரூ.13.14 லட்சம்
1.5-Llitre Petrol CVT ரூ.12.19 லட்சம் ரூ.13.55 Lakh ரூ.14.44 லட்சம்
1.5-Litre Diesel MT ரூ.12.39 லட்சம் ரூ.13.75 லட்சம் ரூ.14.64 லட்சம்

 

 

Tags: Honda Cityஹோண்டா சிட்டி
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version