ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா எஸ்யூவி காரின் புதிய மாடலுக்கு மார்ச் 2ஆம் தேதி முன்பதிவு துவங்கிய 10 நாட்களுக்குள் 10,000 யூனிட்டுகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. முன்பதிவு கட்டணம் ரூ.25,000 ஆகும்.

உயர் ரக ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்படுள்ள கிரெட்டாவின் தரத்தினை இரண்டு ஆப்பிரிக்கா காட்டு யானைகளை காரின் மீது ஏற்றினாலும் உறுதியான பாடியை கொண்டிருக்கும் என ஹூண்டாய் குறிப்பிடுகின்றது.

கிரெட்டா எஸ்யூவி காரில் தற்போது பிஎஸ்6 ஆதரவுடன் கூடிய மூன்று என்ஜினை பெற உள்ளது. குறிப்பாக இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜினை பெறுகின்றது.

என்ஜின் பவர் டார்க் கியர்பாக்ஸ் மைலேஜ்
1.5L பெட்ரோல் 115 PS 144 Nm 6 வேக MT 16.8 km/l
1.5L பெட்ரோல் 115 PS 144 Nm CVT  17.1 km/l
1.4L டர்போ பெட்ரோல் 140 PS 242 Nm 7 வேக DCT 16.8 km/l
1.5L டர்போ டீசல் 115 PS 250 Nm 6 வேக MT 21.4 km/l
1.5L டர்போ டீசல் 115 PS 250 Nm 6 வேக AT 18.3 km/l

 

செல்டோஸ் மாடலுக்கு மிக கடுமையான போட்டியை ஏற்படுத்தவல்ல கிரெட்டா காரும் ஒரே பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு ஒரே என்ஜின்களை பகிர்ந்து கொள்ளுகின்றன.

மார்ச் 17 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில் முதல் தலைமுறை கிரெட்டா காரின் விலையை விட சற்று கூடுதலாக ரூ.10 லட்சம் முதல் ரூ. 16 லட்சத்திற்குள் வெளியிடப்படலாம். இந்த மாடலுக்கு போட்டியாக கியா செல்டோஸ், எக்ஸ்யூவி 500, எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் போன்றவற்றை எதிர்கொள்ள உள்ளது.