ஜப்பானில் புதிய ஹைப்பர் கார் அறிமுகமாகி வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அஸ்பார்க் அவுல் ((Aspark Owl)) என்ற கார் நிறுவனம் புதிய ரக கார் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. 2 நொடிகளில் 96 கிலோ மீட்டர் வேகத்தைத் தொடும் வகையில் 430 குதிரைத் திறன் கொண்டது இந்த ஹைப்பர் கார்.
860 கிலோ எடைகொண்ட ஹைப்பர் கார், பாரீஸில் நடைபெற்ற கார் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. இந்திய மதிப்பில் எட்டரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தக் காரை வாங்குவதற்கு உலகம் முழுவதிலும் ஏராளமானோர் ஆர்வமாய் முன்பதிவு செய்து வருகின்றனர்.