Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

5 லட்ச ரூபாய் விலை குறைக்கப்பட்ட ஆடி ஏ3 காரின் பின்னணி என்ன.?

by automobiletamilan
June 2, 2019
in கார் செய்திகள்

Audi A3

இந்தியாவின் ஆடம்பர கார் சந்தையில் மிகவும் பிரபலமாக விளங்கும் ஆடி ஏ3 செடான் ரக காரின் விலை அதிகபட்சமாக ரூ.4.94 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆடி ஏ3 காரின் தொடக்க விலை ரூ. 28.99 லட்சம் (விற்பனையக விலை) தொடங்குகின்றது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் வெளியிடப்பட்ட ஆடி ஏ3 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகளை ஆடி ஏ3 நிறைவு  செய்துள்ளது. இதனை முன்னிட்டு அதிரடியான விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஆடி ஏ3 கார் சிறப்புகள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஆடியின் ஏ3 கார் ஆனது பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் மொத்தம் நான்கு வகையான வேரியண்டில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

1.4 லிட்டர் TFSI பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 150 எச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பெற்றுள்ளது.

அடுத்தப்படியாக, 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 143 எச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகின்றது. இதில், 6 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை பெற்றுள்ளது.

ஆடி ஏ3 கார் விலை பட்டியல்

வேரியன்ட் முந்தைய விலை புதிய விலை வித்தியாசம்
35 TFSI Premium Plus ரூ. 33.12 லட்சம் ரூ. 28.99 லட்சம் ரூ. 4.13 லட்சம்
35 TFSI Technology ரூ. 34.57 லட்சம் ரூ. 30.99 லட்சம் ரூ. 3.58 லட்சம்
35 TDI Premium Plus ரூ. 34.93 லட்சம் ரூ. 29.99 லட்சம் ரூ. 4.94 லட்சம்
35 TDI Technology ரூ. 36.12 லட்சம் ரூ. 31.99 லட்சம் ரூ. 4.13 லட்சம்

 

Tags: AudiAudi A3ஆடி A3
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version