இந்தியாவில் ஆடி ஆடம்பர கார் தயாரிப்பாளரின் குறைந்த விலை எஸ்யூவி மாடலாக ஆடி Q2 கார் ரூ.34.99 லட்சம் விலையில் துவங்கி அதிகபட்சமாக ரூ.48.89 லட்சம் வரை (விற்பனையகம் இந்தியா) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த சில மாதங்களில் சர்வதேச அளவில் புதிய ஆடி க்யூ2 ஃபேஸ்லிஃப்ட் வெளியாக உள்ள நிலையில் 2016 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட மாடலை தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 2500 யூனிட்டுகளுக்கு இந்தியாவில் தளர்வு உள்ளதால் முற்றிலும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனை செய்ய உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கபட்டுள்ள ஆடி க்யூ2 காரில் உள்ள 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 190 ஹெச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வேகம் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.5 விநாடிகளும் மற்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 228 கிமீ வரை எட்டும் திறனை கொண்டுள்ளது.
ஆடி Q2 எஸ்யூவி காரில் விரிச்சுவல் காக்பிட், MMI இன்டர்ஃபேஸ், ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி வசதி பெற்ற ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜர், சன் ரூஃப்,180 வாட் 10 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
Audi Q2 Advanced Line Trims
Standard – ரூ.34.99 லட்சம்
Premium – ரூ.40.89 லட்சம்
Premium Plus 1 – ரூ.44.64 லட்சம்
Audi Q2 Design Line
Trims Premium Plus 2 – ரூ. 45.14 லட்சம்
Technology – ரூ.48.49 லட்சம்
அறிமுக சலுகையாக ஆடி நிறுவனம் 5 வருட சர்வீஸ் பேக்கேஜ், 2+3 வருட நீட்டிக்கப்பட்ட வாரண்டி, 2+3 சாலையோர உதவி வசதி வழங்குகின்றது. சன்ரூஃப் பெற ரூ.1.50 லட்சம் கூடுதல் கட்டணமாகும்.
web title : Audi Q2 Launched In India