100 யூனிட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள ஆடி Q7 பிளாக் எடிஷனில் பல்வேறு ஸ்டைலிங் அம்சங்கள் இணைக்கப்பட்டு விற்பனைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆடி க்யூ 7 பிளாக் பதிப்பில் வெளிப்புறத்தில் பல்வேறு இடங்களில் கருப்பு நிறத்தை விரிவாகப் பயன்படுத்தப்பட்டிருகின்றது. இது ஏர் டேக் கிரில் மற்றும் ரேடியேட்டர் கிரில்களில் டைட்டானியம் பிளாக் பளபளப்பான முறையில் வழங்கப்பட்டுள்ளது.
டோர் டிரிம் ஸ்டீரிப் டைட்டன் பிளாக் வழங்கப்பட்டுள்ளது. சைடு விண்டோஸ் மற்றும் ரூஃப் லைன் ஃபிரேம் போன்றவற்றில் பளபளப்பான கருப்பு வண்ணத் பெறுகிறது. பின்புற டிஃப்பியூசர் டைட்டானியம் பிளாக் மேட்டில் மற்றும் கருப்பு வண்ணத்தில் ரூஃப் ரெயில் மற்றும் அலாய் வீல்கள் பெற்றுள்ளது.
Q7 பிளாக் பதிப்பு ஆனது Q7 டெக்னாலாஜி வேரியண்டை பின்பற்றியதாக இன்டிரியர் உள்ளது. குறிப்பாக, க்யூ 7 பிளாக் பதிப்பின் விலை டெக்னாலாஜி வேரியண்டை விட ரூ .1 லட்சம் அதிகம். கியூ 7 பிளாக் பதிப்பின் விலை 45 TFSI பெட்ரோலுக்கு ரூ .82.15 லட்சம் மற்றும் 45 TDI டீசலுக்கு ரூ .86.30 லட்சம் (எக்ஸ்ஷோரூம் இந்தியா).
ஆடி இந்தியா கூடுதல் சலுகையாக செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முன்னதாக வாங்குபவர்களுக்கு மத்திய அரசு வழங்குகின்ற 30 சதவீத தேய்மான திட்டங்களிலிருந்து வாங்குபவர்களுக்கு பயனடைய இயலும்.