ஆடி இந்தியா நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள புதிய Q8 எஸ்யூவி 200 எண்ணிக்கையில் மட்டும் கிடைக்க உள்ளது. முற்றிலும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு ரூபாய் 1 கோடியே 33 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
48 வோல்ட் ஹைபிரிட் அமைப்புடன் கூடிய 3.0 லிட்டர் TFSi v6 டர்போ பெட்ரோல் என்ஜின் மூலம் இயக்கப்படுகின்ற க்யூ8 அதிகபட்சமாக 340 ஹெச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த காரில் 8 ஸ்பீட் டிப் டிரானிக் டிரான்ஸ்மிஷனுடன் பொருத்தப்பட்டுள்ளது. க்யூ8 ஆல் வீல் டிரைவ் குவாட்ரோ தொழில்நுட்பத்துடன் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 5.9 வினாடிகளில் வரும்.
க்யூ8 காரை பொறுத்த வரை மிக நீண்டகாலமாக இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த பிரீமியம் எஸ்யூவி பல்வேறு வசதிகளுடன் ஆடம்பர பிரியர்களுக்கு ஏற்றதாக கிடைக்கின்றது.