புதிய கார் பாதுகாப்பு தர சோதனைகளுக்கான கிராஷ் டெஸ்ட் நடைமுறை இந்தியாவில் Bharat NCAP என்ற பெயரில் அக்டோபர் 1, 2023 முதல் நடைமுறைக்கு வருகின்றது.
இதுகுறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், கூடுதல் செயலாளர் மகமூது அகமது கூறுகையில், ஜூலை 1, 2023 முதல் விதிமுறைகளை வெளியிடுவதற்கான செயல்முறையுடன் கூடிய வரைவு அறிவிப்பை அமைச்சகம் இறுதி செய்துள்ளது என்று அகமது கூறினார்.
“நாங்கள் BNCAP விதிமுறைகளை செயல்படுத்துவதற்கான தளத்தை அமைத்துள்ளோம், இது வரைவு அறிவிப்பை இறுதி செய்துள்ளோம். இது ஜூலை 1 ஆம் தேதி கட்டாய மதிப்பாய்வுக்காக 30 நாட்களுக்கு வைக்கப்படும்,” என்று அகமது கூறினார்.
பாரத் புதிய கார் பாதுகாப்பு மதிப்பீட்டு திட்டம் ( Bharat NCAP – Bharat New Car Assessment Program) என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும் இதன் முழுபெயர் பாரத் புதிய வாகன பாதுகாப்பு மதிப்பீட்டு திட்டம் (Bharat New Vehicle Safety Assessment Programme – BNVSAP ) என அழைக்கப்பட உள்ளது.
சர்வதேச கிராஷ் டெஸ்ட் மையங்களுக்கு இணையான கிராஷ் விதிமுறைகளுக்கு ஏற்ப புதிய கார்களை சோதனை செய்வதற்கான மையத்தை ARAI நிறுவியுள்ளது. புதிய கார்களை 64 km/hr வேகத்தில் சோதனை செய்யக்கூடும்.
அரசாங்கத்தால் இறுதி செய்யப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, கார்கள் பாதசாரிகளின் பாதுகாப்புக்கு ஏற்ற வடிவமைப்பு, காரின் கட்டமைப்பு பாதுகாப்பு, செயலில் மற்றும் செயலற்ற பாதுகாப்பு உதவி தொழில்நுட்பங்களை வழங்குதல் மற்றும் வாகனத்தில் வயது வந்தோர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு போன்ற பல்வேறு காரணிகள் உள்ளடக்கியதாக மதிப்பீட்டை தீர்மானிக்கப் பயன்படும்.
பாரத் என்சிஏபியின் சோதனை நெறிமுறை ஆனது உலகளாவிய கிராஷ் டெஸ்ட் மையங்களுக்கு இணையானதாக இருக்கும். மேலும் ,புதிய தரநிலைகள் என்சிஏபி இணையதளத்தில் 1 முதல் 5 நட்சத்திரங்கள் வரையிலான நட்சத்திர மதிப்பீடுகளை கொண்டிருக்கும்.
பாரத் என்சிஏபி மதிப்பீடுகள் தன்னார்வமாக இருக்கும் அதே வேளையில், சோதனைக்கான வாகன மாதிரிகளைப் பகிர்ந்து கொள்ள வாகன தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கப்படும் அல்லது ஷோரூம்களில் இருந்தும் வாகனங்களை எடுத்து சோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய பாரத் கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளின் படி, அதிகபட்சமாக எட்டு இருக்கைகள் வரை உள்ள பயணிகள் வாகனங்களுக்கும், 3.5 டன்னுக்கும் குறைவான மொத்த வாகன எடை கொண்டவையாகவும் உள்ள மாடல்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு மதிப்பீடுகள் அமல்படுத்தப்படும்.
ஐசி என்ஜின் வாகனங்கள் மட்டுமல்லாமல், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் செயல்படுத்த உள்ளது.
புதிய கொள்கை உள்ளூர் வாகன உற்பத்தியாளர்களுக்கும் பயனளிக்கும், வகையில் தங்கள் மாதிரிகளை சோதனை மற்றும் நட்சத்திர தரவரிசைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டியதில்லை,
ஒருவேளை வாகன தயாரிப்பாளர்கள் அரசாங்கத்திடம் அக்டோபர் 1 முதல் கட்டாயம் என்ற நடைமுறையை தளர்த்த கோரிக்கை விடுத்தால் சற்று தாமதமாக பாரத் என்சிஏபி நடைமுறைக்கு வரக்கூடும்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…