வெற்றிகரமாக பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 50 ஆண்டுகளை கடந்துள்ளதை முன்னிட்டு ‘Jahre’ எடிசன் என்ற பெயரில் 330Li M ஸ்போர்ட் மாடல் ரூ.64 லட்சம் மற்றும் M340i மாடல் ரூ.79 லட்சம் என எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஒவ்வொரு மாடலிலும் வெறும் 50 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
BMW 330Li M ஸ்போர்ட்
330Li M ஸ்போர்டில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 258hp பவர் மற்றும் 400Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. ஸ்பெஷல் எடிசனில் வழக்கமான பாரம்பரியத்தை பெற்ற கிட்னி கிரில், பின்புற டிஃப்பியூசர் மற்றும் டெயில் பைப்பில் பளபளப்பான கருப்பு நிறம் பெறுகிறது; B-பில்லரில் ‘1/50’ பேட்ஜிங் உள்ளது. இன்டீரியரில் கார்பன் ஃபைபர் மற்றும் ஹெட்-அப் டிஸ்ப்ளே மற்றும் 3D நேவிகேஷன் ஆகியவற்றைப் பெறுகிறது.
இந்த மாடல் மினரல் ஒயிட், ஸ்கைஸ்க்ரேப்பர் கிரே மற்றும் எம் கார்பன் பிளாக் என மூன்று நிறங்களுடன் தோல் அப்ஹோல்ஸ்டரி வெர்னாஸ்கா காக்னாக் மற்றும் கருப்பு நிறத்தில் உள்ளது.
BMW M340i 50 Jahre Edition
3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 347hp பவர் மற்றும் 500Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. B-பில்லரில் ‘1/50’ பேட்ஜிங் உள்ளது. இன்டீரியரில் கார்பன் ஃபைபர் மற்றும் ஹெட்-அப் டிஸ்ப்ளே மற்றும் 3D நேவிகேஷன் ஆகியவற்றைப் பெறுகிறது.
டிராவிட் கிரே, பிளாக் சபையர், ஃபயர் ரெட் மெட்டாலிக் மற்றும் ஆர்க்டிக் ரேஸ் ப்ளூ நிறங்களை பெற்று உட்புறத்தில், எம் ஹைலைட்ஸுடன் கருப்பு நிறத்தில் தோல் வெர்னாஸ்கா அப்ஹோல்ஸ்டரியைப் பெறுகிறது.