பி.எம்.டபிள்யூ கார் விற்பனை இந்தியாவில் 11 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ., தனது விற்பனை விவரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில் தங்கள் நிறுவனத்தின் கார் விற்பனை இந்தியாவில் 11 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் (அதாவது ஜனவரி – செப்டம்பர் இடையே) பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 7,915 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் 7,424 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது சுமார் 11% உயர்வு ஆகும்.