வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி பிஎம்டபிள்யூ நிறுவனம் ஆரம்ப நிலை iX1 எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
விற்பனையில் உள்ள X1 எஸ்யூவி காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட எலக்ட்ரிக் மாடலாகும்.
BMW iX1 Electric
iX1 பேட்டரி காரில் 64.7kWh பேட்டரி பொருத்தப்பட்டு இரட்டை மோட்டார் அமைப்பின் மூலம் அதிகபட்சமாக 313bhp பவர் மற்றும் 494Nm டார்க் வரை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. iX1 எலக்ட்ரிக் எஸ்யூவி வெறும் 5.3 வினாடிகளில் 0-100kmph வேகத்தை எட்டும் . AWD கொண்டதாக வரவுள்ளது.
பிஎம்டபிள்யூ iX1 எலக்ட்ரிக் எஸ்யூவி காரினை சிங்கிள் சார்ஜிங் மூலம் அதிகபட்சமாக 438KM வரை வெளிப்படுத்தும்.
முழுமையான வடிவமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்யப்பட்ட உள்ளது.
இந்தியாவில் விற்பனையில் உள்ள வால்வோ சி40 ரீசார்ஜ், XC40 ரீசார்ஜ், ஹூண்டாய் ஐயோனிக் 5 மற்றும் கியா EV6 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.