பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான மாருதி சுசுகி நிறுவனத்தின் யுட்டிலிட்டி ரக ஈக்கோ வேன் விலை ரூ. 20,000-ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டு ரூ.3.81 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆம்னி நீக்கப்பட்டதை தொடர்ந்து ஈக்கோ காரின் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஈக்கோ தற்போது வரை 6.50 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஈக்கோ அதே 1.2-லிட்டர், நான்கு சிலிண்டர் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த என்ஜின் 73 பிஹெச்பி மற்றும் 98 என்எம் டார்க்கை வெளிப்படுத்துகிறது. முந்தைய மாடலை விட கூடுதலான மைலேஜ் வழங்குகின்ற ஈக்கோ மைலேஜ் தற்போது லிட்டருக்கு 16.11 கிமீ ஆகும்.
பிஎஸ் 6 ஈக்கோ மாடல் ரூ.3.81 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ. 4.21 லட்சம் வரை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
(எக்ஸ்ஷோரூம் டெல்லி)