டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட டிகோர், டியாகோ மற்றும் நெக்ஸான் எஸ்யூவி கார்கள் விற்பனைக்கு ஜனவரி 22 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதே நேரத்தில், அல்ட்ராஸ் காரின் விலையும் அறிவிக்கப்பட உள்ளது.
இந்தியாவின் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற காராக விளங்கும் நெக்ஸான் எஸ்யூவி மாடலை தொடர்ந்து, அல்ட்ராஸ் காரும் 5 நட்சத்திர மதிப்பீட்டை குளோபல் என்சிஏபி சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நெக்ஸான் எலக்ட்ரிக் காரும் ஜனவரி 28 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
பிஎஸ்6 என்ஜினை பெற உள்ள இந்த காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் என்ஜின் 110 ஹெச்பி 5,000 ஆர்.பி.எம் சுழற்சியிலும், 170 என்எம் டார்க்கை 1,750-4,000 ஆர்.பி.எம்-யில் வழங்கும்.
அடுத்து, 1.5 லிட்டர் ரெவோடார்க் டர்போ டீசல் 3,750 ஆர்.பி.எம் சுழற்சியில் 110 ஹெச்பி மற்றும் 1,500-2,750 ஆர்.பி.எம்-ல் 260 என்எம் டார்க் வழங்கும். முன்பு போல, இரண்டு என்ஜினும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோ கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் கிடைக்கும்.
2020 நெக்ஸான் பெட்ரோல் என்ஜின் பெற்ற மாடல் விலை ரூ .60,000 முதல் 90,000 வரை அதிகபட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் என்ஜின் மாடல் விலை ரூ .1.4 லட்சம் வரை அதிகபட்சமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2020 டாடா டியாகோ, 2020 டாடா டிகோர்
2020 டாடா டியாகோ மற்றும் 2020 டாடா டிகோர் என இரு மாடல்களின் முன்புறத்தில் ஷார்ப் எட்ஜ் கொண்டு சற்று ஸ்டைலிஷாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப் மெலிதாகவும், இந்நிறுவனத்தின் ஸ்டைலிஷான மூன்று கோடுகளை கொண்ட அம்பு வடிவத்தை (Tri-Arrow) நேர்த்தியான புதிய ரேடியேட்டர் கிரில்லுடன் கொண்டிருக்கின்றது.
ஹெட்லேம்ப் மற்றும் ரேடியேட்டர் கிரில் பகுதியில் க்ரோம் பாகங்கள், புதுப்பிக்கப்பட்ட ஏர்டேம், பனி விளக்குகள் மற்றும் பின்புறத்தில் டெயில் விளக்குகள் போன்றவை ஸ்டைலிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இரு மாடல்களிலும் பயன்படுத்து வந்த பிஎஸ்4 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் இடம்பெற்றிருந்த நிலையில், இனி வரவுள்ள மாடலில் 1.05 டீசல் என்ஜின் கைவிடப்பட உள்ளது. பிஸ்6 பெட்ரோல் என்ஜின் தொடர்ந்து 86 ஹெச்பி மற்றும் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
விற்பனையில் உள்ள மாடலை விட பிஎஸ்6 2020 டாடா டியாகோ காரின் விலை ரூபாய் 45,000 வரை உயர்த்தப்படவும், அடுத்து டிகோர் காரின் விலை ரூபாய் 50,000 வரை உயர்த்தப்பட உள்ளது.