சீனாவைச் சேர்ந்த பிஒய்டி (BYD) நிறுவனம், இந்தியாவில் மின்சார பேருந்துகளை விற்பனை செய்து வரும் நிலையில், T3 எம்பிவி ரக கார் மற்றும் T3 மினிவேன் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு என இரண்டு மின்சார வாகனங்களை விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான BYD (Build Your Dreams), இந்தியாவில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பேருந்து தயாரிப்பில் ஈடுப்பட்டு வருகின்ற நிலையில் இந்தியா மட்டுமல்லாமல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.
பிஒய்டி T3 எம்பிவி கார் மாடலானது பயணிகள் போக்குவரத்திற்கும், பிஒய்டி T3 மினி வேன் மாடலானது வர்த்தக பயன்பாட்டிற்கும் ஏற்ற சிறப்பம்சங்களை முழுமையாக பேட்டரியில் இயங்கும் மாடலாகும். சாதாரண ஏசி சார்ஜர் உட்பட டிசி சார்ஜரில் 90 நிமிடங்களில் முழுமையான சார்ஜிங் செய்ய இயலும். இரு மாடல்களும் அதிகபட்சமாக 300 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும்.
BYD எலக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் கிடைக்கக்கூடிய பல்வேறு வசதிகள் மற்றும் அம்சங்களை வழங்குகின்றன. இதில் கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், புளூடூத் இணைப்பு, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் பெற்றுள்ளன. இரு வாகனங்களும் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் பொருத்தப்பட்டுள்ளன.
இரண்டு மாடல்களும் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்), எலக்ட்ரிக் பார்க்கிங் சிஸ்டம் (EPB), பிரேக் ஓவர்ரைடு சிஸ்டம் (BOD), எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்டிரிபுன்ஸ் (EBD) மற்றும் பல மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளை கொண்டதாக வரவுள்ளது. ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்தை ஆற்றலைச் சேமிக்கவும் உதவுகிறது. மேலும், கன்ட்ரோலர் ஏரியா நெட்வொர்க் (CAN) பஸ் தொடர்பு அமைப்பு ஸ்மார்ட் மேலாண்மை மற்றும் பராமரிப்பை வழங்குகிறது.
பெங்களூரு, ராஜ்கோட், புது தில்லி, ஹைதராபாத், கோவா, கொச்சின், சண்டிகர், விஜயவாடா, மணாலி, மும்பை, சூரத் மற்றும் பிற நகரங்களில் இந்திய BYD இ பஸ்களை இயக்கி வருகின்றது. தற்போது, இந்தியாவில் வணிக ரீதியாக இயங்கும் மின் பேருந்துகளின் 52 சதவீத சந்தைப் பங்கை BYD கொண்டுள்ளது.