Automobile Tamilan

மார்ச் 27.., சிட்ரோன் பாசால்ட் கூபே எஸ்யூவி அறிமுகம்

சிட்ரோன் பாசால்ட் கூபே எஸ்யூவி அறிமுகம்

இந்தியாவில் சிட்ரோன் வெளியாட உள்ள கூபே ஸ்டைல் பெற்ற எஸ்யூவி மாடலுக்கு பாசால்ட் என பெயரிடப்பட்டு மார்ச் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதை உறுதிபடுத்தியுள்ளது. முன்பாக C3X என அறியப்பட்டு வருகின்ற இந்த மாடல் சி3 பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டாலும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீனத்துவமான கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டிருக்கும்.

தற்பொழுது வரை சிட்ரோன் பாசால்ட் விஷன் கூபே ரக எஸ்யூவி மாடல் பற்றி வெளிவந்துள்ள விபரத்தை அறிந்து கொள்ளலாம்.

Citroen Basalt Coupe SUV

இந்திய சந்தைக்கு வரவுள்ள பாசால்டின் நீளம் 4.3 மீட்டர் முதல் 4.4 மீட்டர் வரை இருக்கலாம் என கூறப்படுகின்ற நிலையில் C-Cubed வரிசையில் உள்ள C3, C3 ஏர்கிராஸ் உள்ளிட்ட மாடல்களின் அடிப்படையான பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்படுகின்றது.

முந்தைய மாடல்கள் விலை குறைப்பிற்கு பல்வேறு வசதிகள் குறைக்கப்பட்டிருந்த வரவுள்ள புதிய மாடல் வயர்லெஸ் சார்ஜிங், கீலெஸ் என்ட்ரி, கனெக்ட்டிவிட்டி வசதிகள் பெற்ற 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல், எலக்ட்ரிக் அட்ஜெஸ்மென்ட் இருக்கை மற்றும் ஆட்டோமேட்டிக் HVAC கட்டுப்பாடுகள் கொண்டிருக்கலாம்.

110 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் வரவுள்ள மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் என இரண்டு விதமான ஆப்ஷனையும் பெறலாம்.

பாசால்ட் அறிமுக விபரம்

மார்ச் 27-03-2024 அறிமுகம் செய்யப்பட்டாலும் விற்பனைக்கு மே அல்லது ஜூன் மாதம் விலை அறிவிக்கப்பட உள்ள சிட்ரோன் பாசால்ட் கூபேவின் விலை ரூ.12 லட்சத்தில் துவங்கலாம்.

மேலும் இந்நிறுவனம் முன்பே குறிப்பிட்ட படி, 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையும் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெறுமா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, வோக்ஸ்வாகன் விர்டஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகியவற்றுடன் புதிதாக வரவுள்ள டாடா கர்வ் ஆகியவற்றையும் எதிர்கொள்ளலாம். இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு சர்வதேச நாடுகளில் குறிப்பாக தென்அமெரிக்காவிலும் வெளியிடப்பட உள்ளது.

Exit mobile version