ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின், சிட்டி எலிகேட் எடிசன் மற்றும் அமேஸ் எலைட் எடிசன் என இரண்டும் விற்பனைக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹோண்டா சிட்டி எலிகன்ட் எடிஷன் விலை ரூ. 12.57 லட்சம் (மேனுவல்) மற்றும் ரூ. 13.82 லட்சம் (சிவிடி). ஹோண்டா அமேஸ் எலைட் மாடல் விலை ரூ. 9.03 லட்சம் MT மற்றும் ரூ. 9.85 லட்சம் ( சிவிடி) (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்).
Honda Amaze and City
பிரசத்தி பெற்ற சிட்டி காரில் 121hp பவர், 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்று 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ஹோண்டா சிட்டி எலிகண்ட் காரின் V வேரியண்ட் அடிப்படையில், சன்ரூஃப், 15 இன்ச் அலாய் வீல், 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் லேன்-வாட்ச் கேமரா வசதிகளுடன் கூடுதலாக, எல்இடி ஸ்டாப் விளக்கு கொண்டு பின்புற ஸ்பாய்லர் உள்ளது.
‘எலிகன்ட் எடிஷன்’ பேட்ஜிங் மற்றும் ‘சிட்டி’ ஒளிரும் வகையிலான படி பேனல் ஆகியவை அடங்கும். உட்புறத்தில், ஒளிரும் ஃபுட்வெல் மற்றும் ‘எலிகன்ட் எடிஷன்’ பேட்ஜ் பழுப்பு நிற இருக்கை பெறுகிறது.
அமேஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 ஹெச்பி பவர் வழங்குவதுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. VX வேரியண்ட் அடிப்படையில், வந்துள்ள அமேஸ் எலைட் காரில் ஸ்பாய்லர் மற்றும் விங் மிரர் பெற்றுள்ளது.
எலைட் எடிசன் சிறப்பு பேட்ஜிங் பெற்ற ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட் கொண்ட இருக்கை கவர்களைக் கொண்டுள்ளது. டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு மற்றும் டயர் இன்ஃப்ளேட்டர் பெற்றுள்ளது.