வரும் ஜூலை 1, 2023 முதல் சிட்ரோன் C3 காரின் விலையை ரூ.17,500 வரை உயர்த்த உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. டர்போ பெட்ரோல் மற்றும் பெட்ரோல் மாடல்கள் மட்டுமே விலை உயருகின்றது.
இந்திய சந்தையில் அடுத்த சில வாரங்களில் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் விற்பனைக்கு வெளியாக உள்ளது. மேலும், சி3 அடிப்படையிலான eC3 எலக்ட்ரிக் கார் 230 கிமீ ரேஞ்சு கொண்டதாக விற்பனை செய்யப்படுகின்றது.
Citroen C3 price hike
டாடா பஞ்ச், வரவிருக்கும் ஹூண்டாய் எக்ஸ்டர், இக்னிஸ் உட்பட ஹேட்ச்பேக் கார்களை எதிர்கொள்ளும் சிட்ரோன் சி3 காரில் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன் உள்ளது. 1.2-லிட்டர் டர்போ மாடல் அதிகபட்சமாக 110 PS மற்றும் 190 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
80 bhp குதிரைத்திறன் மற்றும் 115 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் PURETECH 82 இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்கும்.
Live, Feel, Shine என மூன்று விதமாக பெற்று Vibe என்ற கூடுதல் ஆக்செரீஸ் பேக் பெற்ற வேரியண்டுகளும் உள்ளது.
ஷைன் வேரியண்டில் எலக்ட்ரிக் அட்ஜெஸ்டபிள் விங் மிரர், ரியர் பார்க்கிங் கேமரா, மேனுவல் பகல்/இரவு பின்புற பார்வை கண்ணாடி மற்றும் முன்புற பனி விளக்குகள் போன்றவை உள்ளது. கூடுதலாக இந்த வேரியண்டில் 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல் உள்ளது. C3 காரில் இப்போது My Citroen Connect ஆப் பெற்று சுமார் 35 கனெக்ட்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது.