Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
October 11, 2019
in கார் செய்திகள்

Datsun Go plus CVT

குறைந்த விலை கார்களை தயாரிக்கும் நிசான் டட்சன் நிறுவனத்தின் கோ மற்றும் கோ பிளஸ் எம்பிவி ரக மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு  T மற்றும் T (O) என இரு விதமான வேரியண்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது.  முந்தைய மாடலை விட 9 ஹெச்பி வரை புதிய மாடலின் பவர் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்பொழுது வந்துள்ள கோ ஹேட்ச்பேக் மற்றும் கோ பிளஸ் எம்பிவி என இரு கார்களிலும் இணைக்கப்பட்டுள்ள வெய்கிள் டைனமிக் கண்ட்ரோல் சிஸ்டம் (Vehicle Dynamic Control – VDC) ஆனது, வாகனத்தின் ஸ்டீயரிங் பொசிஷன், வீல் ஸ்பீடு மற்றும் வளைவுகளில் வாகனத்தின் நிலைப்புத்தனைமை கண்காணிக்கும் சென்சார் விபரங்ளை எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் சிஸ்டம் பெற்று சிறப்பான வாகன நிலைப்பாட்டை மேம்படுத்த உதவுகின்றது. இதுதவிர கூடுதலாக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உடன் இபிடி மற்றும் பிரேக்கிங் அசிஸ்ட் கொண்டதாக விளங்குகின்றது.

T (O) வேரியன்டுகளில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே அம்சத்துடன் 14 அங்குல அலாய் வீல் உடன் வந்துள்ளது. T வேரியண்டில் எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் அலாய் வீல் பெற்றுள்ளது. இரண்டு கார்களிலும் 77 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 104 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

டட்சன் கோ காரின் சிவிடி மாடல் விலை ரூ.5.94 லட்சம் முதல் ரூ. 6.18 லட்சம் வரை அமைந்திருக்கின்றது.  ரெனோ ட்ரைபரை எதிர்கொள்ளும் டட்சன் கோ பிளஸ் எம்பிவி ரக சிவிடி காரின் விலை ரூ. 6.58 லட்சம் முதல் ரூ. 6.80 லட்சம் வரையில் அமைந்திருக்கின்றது.

(எக்ஸ்ஷோரூம் இந்தியா)

Datsun Go and go plus CVT

Datsun Go CVT

Tags: Datsun GODatsun Go plusடட்சன் கோட்ட்சன் கோ பிளஸ்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version