எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி மாடலின் தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்கள் மற்றும் இன்டிரியரில் இரு வண்ண கலவை கொண்டிருக்கலாம். மற்றபடி இன்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இருக்காது.

கடந்த சில மாதங்களாகவே சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வரும் புதிய ஹெக்டர் காரில் முன்புற தோற்ற அமைப்பில் கிரில் புதுப்பிக்கப்பட்டு கிடைமட்டமான ஸ்லாட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி எல்இடி ஹெட்லைட், எல்இடி டி.ஆர்.எல் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. பக்கவாட்டில் எந்த மாற்றமும் இல்லாமல், புதிய வடிவத்திலான 18 அங்குல அலாய் வீல் இணைக்கப்பட்டுள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற மாடலில் 17 அங்குல வீல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. எனவே, முந்தைய மாடலை விட கூடுதலான கம்பீரத்தை பெறுகின்றது.

இன்டிரியரில் பெரிய அளவிலான எந்த மாற்றங்கள் இல்லாமலும், கூடுதலாக கருப்பு மற்றும் பீஜ் நிறத்திலான இரு வண்ண கலவையில் அமைந்திருக்கும். 10.4 அங்குல அகலம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டேப்லெட் வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் ஓட்டுநருக்கான பல்வேறு தகவல்களை வழங்குகின்றது. பேனராமிக் சன் ரூஃப், 8 வண்ணங்களில் ஜொலிக்கும் மூட் லைட்ஸ் மற்றும் பவர் அட்ஜஸ்டபிள் இருக்கைகள் போன்றவற்றை பெற்றுள்ளது.

ஹெக்டர் இன்ஜின் ஆப்ஷன்

பிரிவு ஹெக்டர் பெட்ரோல் ஹெக்டர் டீசல்
என்ஜின் 1.5 லிட்டர், டர்போ பெட்ரோல் 2.0 லிட்டர் டர்போ டீசல்
குதிரைத்திறன் 143hp 170hp
டார்க் 250Nm 350Nm
கியர்பாக்ஸ் 6-speed MT/6-speed dual-clutch AT 6-speed MT
48V mild-hybrid ஆப்ஷன்
மைலேஜ் லிட்டருக்கு 14.16 கிமீ/13.96 கிமீ AT லிட்டருக்கு 17.41 கிமீ

 

போட்டியாளர்கள்

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் போட்டியாளர்களாக ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டாடா ஹாரியர் மற்றும் நிசான் கிக்ஸ் ஆகியவற்றை எதிர்கொள்ளும்.

ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் என நான்கு வேரியன்டுகளில் மொத்தமாக 13 வகையான வேரியன்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் வரவுள்ள இந்த எஸ்யூவி காரின் விலை கணிசமாக உயர்த்தப்பட உள்ளது. விற்பனைக்கு ஜனவரி 2021-ல் வெளியிடப்பட உள்ளது.