புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹூண்டாய் இந்தியாவின் எக்ஸ்டர் எஸ்யூவி காரை பற்றி அடிக்கடி கேட்கப்படுகின்ற முக்கியமான கேள்விகள் மற்றும் அது தொடர்பான பதில்களை இப்பொழுது அறிந்து கொள்ளலாம்.
மிக கடுமையான போட்டியாளரான டாடா பஞ்ச் எஸ்யூவி, சிட்ரோன் சி3 உள்ளிட்ட மாடல்களுடன் மற்ற நிசான் மேக்னைட், ரெனோ கிகர், மாருதி இக்னிஸ் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
FAQ’s About Hyundai Exter
பாக்ஸ் ஸ்டைலிஷான வடிவமைப்பினை கொண்டுள்ள மாடலில் மிக சிறப்பான பல்வேறு வசதிகள், அடிப்படையாக அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு, 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான முறையில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றதாக வந்துள்ளது.
எக்ஸ்டரின் ஆன்-ரோடு விலை பட்டியல்
ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் பெட்ரோல் என்ஜின் விபரம் ?
எக்ஸ்டர் காரில் 6000rpm-ல் 81 hp பவர், மற்றும் 113.8 Nm டார்க் 4000rpm-ல் வழங்கும் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன் உள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சிஎன்ஜி என்ஜின் விபரம் ?
1.2 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி 6000rpm-ல் 69 hp பவர் மற்றும் 4000rpm-ல் 95.2Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும்.
ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் போட்டியாளர்கள் ?
டாடா, பஞ்ச், சிட்ரோன் சி3, மற்றும் மாருதி இக்னிஸ் எஸ்யூவி மாடல்களை எதிர்கொள்ளும் எக்ஸ்டர் காருக்கு 12 லட்சம் ஆன்-ரோடு விலைக்குள் இருக்கு மற்ற கார்களையும் எதிர்கொள்ளுகின்றது.
ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி மைலேஜ் எவ்வளவு ?
இந்நிறுவனம், ARAI சான்றிதழ் படி 1.2 லிட்டர் பெட்ரோல் எக்ஸ்டர் மைலேஜ் 19.4 Kmpl (MT), மற்றும் 19.2 Kmpl (AMT) ஆகும்.
எக்ஸ்டர் சிஎன்ஜி மைலேஜ் எவ்வளவு ?
ARAI சான்றிதழ் படி 1.2 லிட்டர் பெட்ரோல்+சிஎன்ஜி எக்ஸ்டர் மைலேஜ் 27.1 Km/kg ஆகும்.
ஹூண்டாய் எக்ஸ்டரில் இருக்கை திறன் எவ்வளவு ?
எக்ஸ்டர் காரில் 5 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் பரிமாணங்கள் விபரம் ?
ஹூண்டாய் எக்ஸ்டரின் பரிமாணங்கள் நீளம் 3815 மிமீ, அகலம் 1710 மிமீ மற்றும் உயரம் 1631 மிமீ கொண்டுள்ளது. எக்ஸ்டரின் வீல்பேஸ் 2450 மிமீ ஆகும்.
எக்ஸ்டர் காரில் எத்தனை கதவுகள் உள்ளது ?
5 கதவுகளை பெற்றதாக எக்ஸ்டர் கிடைக்கின்றது.
ஹூண்டாய் எக்ஸ்டரில் எத்தனை ஏர்பேக் உள்ளது
ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக் இடம்பெற்றுள்ளது.
எக்ஸ்டரில் எத்தனை வேரியண்ட் உள்ளது ?
EX, EX(O) S, S(O) SX, SX(O), மற்றும் SX(O) Connect என மொத்தமாக 5 விதமான வேரியண்டுகளின் அடிப்படையில் மொத்தம் 17 வகைகளில் கிடைக்கின்றது.
எக்ஸ்டரின் இன்டிரியர் வசதிகள் சில ?
8.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் கொண்டு பல்வேறு கனெக்ட்டிவ் வசதிகளை டாப் வேரியண்ட் வழங்க உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நேவிகேஷன், இரட்டை கேமரா உடன் கூடிய டேஸ்கேம் (Dashcam), ISOFIX, ஹெட்லேம்ப் எஸ்கார்ட் வசதி, ரியர் பார்க்கிங் கேமரா வசதி மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றை பெற்றுள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டரின் பாதுகாப்பு அம்சங்கள் ?
6 ஏர்பேக் உட்பட ESC (Electronic Stability Control), VSM (Vehicle Stability Management) மற்றும் HAC (Hill Assist Control), 3-பாயின்ட் சீட் பெல்ட் & சீட்பெல்ட் நினைவூட்டல் (அனைத்து இருக்கைகள்), EBD உடன் ஏபிஎஸ், பர்க்லர் அலாரம் பெற்றுள்ளது
ஹூண்டாய் எக்ஸ்டரின் நிறங்கள் விபரம் ?
அட்லஸ் வெள்ளை, டைட்டன் கிரே, ஸ்டாரி நைட், காஸ்மிக் ப்ளூ, சிவப்பு, ரேஞ்சர் காக்கி மற்றும் டூயல் டோன் விருப்பங்களாக அட்லஸ் வெள்ளை, காஸ்மிக் ப்ளூ, ரேஞ்சர் காக்கி ஆகியவற்றை கொண்டுள்ளது.
பூட் ஸ்பேஸ் மற்றும் எரிபொருள் கலன் அளவு ?
185mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டு, 391 லிட்டர் பூட்ஸ்பேஸ் கொள்ளளவுடன், 37 லிட்டர் பெட்ரோல் டேங்க், சிஎன்ஜி வேரியண்டில் 37 லிட்டர் பெட்ரோல் உடன் 60 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் ஆன்-ரோடு விலை ?
ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 7.16 லட்சம் முதல் ₹ 12.42 லட்சம் வரை கிடைக்கும்.
ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி டீசல் என்ஜின் உள்ளதா ?
எக்ஸ்டர் காரில் டீசல் என்ஜின் இல்லை. எதிர்காலத்தில் வரவும் வாய்ப்பில்லை.
ஹூண்டாய் எக்ஸ்டர் எலக்ட்ரிக் எஸ்யூவி வருமா ?
2025 ஆம் ஆண்டு ஹூண்டாய் எக்ஸ்டர் எலக்ட்ரிக் அறிமுகம் செய்யப்படலாம்.