டாடா பஞ்ச் காருக்கு போட்டியாக வந்துள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விலை ரூ.5.99 லட்சத்தில் துவங்குகின்ற நிலையில், எக்ஸ்டரின் மைலேஜ், தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பற்றி தற்பொழுது அறிந்துகொள்ளலாம்.
1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு சிஎன்ஜி என இரண்டு விதமான ஆப்ஷனில் எக்ஸ்டர் கிடைக்கின்றது. EX, EX(O) S, S(O) SX, SX(O), மற்றும் SX(O) Connect என மொத்தமாக 5 விதமான வேரியண்டுகளின் அடிப்படையில் மொத்தம் 18 வகைகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது.
Hyundai Exter On-Road Price in Tamil Nadu
எக்ஸ்டர் காரில் 6000rpm-ல் 81 hp பவர், மற்றும் 113.8 Nm டார்க் 4000rpm-ல் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி என இரண்டிலும். சிஎன்ஜி ஆப்ஷனில் 6000rpm-ல் 69 hp பவர் மற்றும் 4000rpm-ல் 95.2Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் வரவுள்ளது.
ஹூண்டாய் எக்ஸ்டர் பெட்ரோல் என்ஜின் மைலேஜ் 19.4 Kmpl (MT), 19.2 Kmpl (AMT) மற்றும் எக்ஸ்டர் சிஎன்ஜி 27.1 Km/kg ஆகும்.
ஆரம்ப நிலை வேரியண்ட் கூடுதல் ஆக்செரிஸ் சேர்க்கப்படாமல் ரூ.7.06 லட்சம் முதல் டாப் வேரியண்ட் ரூ.12.32 லட்சம் வரை கிடைக்கின்றது. சிஎன்ஜி பெற்ற வேரியண்ட் ரூ.10.01 லட்சம் முதல் ரூ. 10.86 லட்சம் வரை கிடைக்கின்றது. முழுமையான விபரங்கள் கீழே உள்ள அட்டவனையில் உள்ளது.
Hyundai Exter Variants | Ex-showroom | on-road chennai |
Exter EX | ₹ 5,99,900 | ₹ 7,16,637 |
Exter EX (O) | ₹ 6,24,990 | ₹ 7,45,373 |
Exter S | ₹ 7,26,990 | ₹ 8,62,193 |
Exter S (O) | ₹ 7,41,990 | ₹ 8,79,373 |
Exter SX | ₹ 7,99,900 | ₹ 9,45,701 |
Exter SX DT | ₹ 8,22,990 | ₹ 9,72,142 |
Exter SX (O) | ₹ 8,63,990 | ₹ 10,19,990 |
Exter SX (O)Connect | ₹ 9,31,990 | ₹ 10,96,980 |
Exter SX (O) Connect DT | ₹ 9,41,990 | ₹ 11,08,576 |
Exter S AMT | ₹ 7,96,980 | ₹ 9,42,353 |
Exter SX AMT | ₹ 8,67,990 | ₹ 10,23,680 |
Exter SX DT AMT | ₹ 8,90,990 | ₹ 10,50,022 |
Exter SX(O) AMT | ₹ 9,31,990 | ₹ 10,96,980 |
Exter SX (O) AMT Connect | ₹ 9,99,990 | ₹ 11,70,000 |
Exter SX (O) AMT DT Connect | ₹ 10,09,990 | ₹ 12.42.052 |
Exter S CNG | ₹ 8,23,990 | ₹ 10,09,627 |
Exter SX CNG | ₹ 8,96,990 | ₹ 10,96,884 |
கொடுக்கப்பட்டு ஆன்-ரோடு விலை பட்டியல் டீலர்களை பொறுத்து கூடுதல் ஆக்செரிஸ் சேர்க்கப்படும் பொழுது மாறுபடும்.