ரூ.12.99 லட்சம் விலையில் புதிய ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்.யு.வி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மாடலில் மெர்சிடிஸ் OM 611 என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு வெளியாகியுள்ளது. #GurkhaXtreme
முன்புற மற்றும் பின்புற ஆக்சில்களுக்கான டிஃபரன்ஷியல் லாக்கிங் வசதியுடன் வந்துள்ள புதிய குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்.யு.வி மாடல் சிறப்பான ஆஃப் ரோடு அனுபவத்தை வழங்குகின்ற இந்த காரில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் மெர்சிடிஸ் OM 611 நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 140HP பவர் மற்றும் 321 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லமையை பெற்றதாக அமைந்தள்ளது. இதில் மெர்சிடிஸ் இருந்து பெறப்பட்ட 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
முழுமையான ஆஃப் ரோடு அனுபவத்தை வழங்கும் நோக்கில் இடம்பெற்றுள்ள டிஃபரன்ஷியல் லாக் அமைப்புடன், மிக சிறப்பான மைலேஜ் தரவல்ல 2 வவீல் டிரைவ் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மற்ற குர்கா எக்ஸ்புளோர் மற்றும் எக்ஸ்பிடியேஷன் போன்றவற்றில் இருந்து வித்தியாசப்படும் வகையில் எல்இடி டர்ன் இன்டிகேட்டர், முன் மற்றும் பின்புற பம்பர்கள் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டு , விங்க் மிரர் மற்றும் பாடி ஸ்டிக்கரிங் கொண்டதாக அமைந்துள்ளது.
மேலும் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி மாடலில் 550mm நீரிலும் பயணிக்கும் திறன் கொண்டிருப்பதுடன் 40 டிகிரி கோண சரிவு சாலையிலும் பயணிக்கும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது.
ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்.யு.வி விலை ரூ.12.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…