பிரபலமான 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற ஃபோர்டு ஈகோஸ்போர்ட் எஸ்யூவி காரில் தண்டர் எடிசன் என்ற சிறப்பு மாடலை ஃபோர்ட் விற்பனைக்கு வெளியிட உள்ளது. இன்டீரியர் மற்றும் வெளிப்புற தோற்றத்தில் மட்டும் மாற்றங்களை பெற்றிருக்கின்றது.
சந்தையில் கிடைக்கின்ற டைட்டானியம் + வேரியன்டை பின்பற்றி இன்டீரியர் மற்றும் வெளிப்புற செய்யபட்ட இந்த சிறப்பு பதிப்பில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளில் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.
ஃபோர்டு ஈகோஸ்போர்ட் தண்டர் எடிசன்
சமீபத்தில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஓனர்ஸ் ஃபேஸ்புக் க்ரூப் மூலம் வெளியாகியுள்ள படங்களில், வெளிப்புற தோற்றத்தில் குறிப்பிடதக்க மாற்றமாக ஹூடின் மேற்புறத்தில் மேட் கருப்பு நிறத்தில் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டு, பக்கவாட்டில் மேற்கூறை மற்றும் ஸ்பேர் டயர் உள்ள இடங்களில் இந்த ஸ்டிக்கர் காண கிடைக்கின்றது. இதில் 17 அங்குல அலாய் வீல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
உட்புறத்தில் குறிப்பாக அப்ஹோல்ட்ரி புதுப்பிக்கப்பட்டள்ளது. மற்றபடியான வசதிகள் மற்றும் நுட்பங்கள் போன்றவை அனைத்தும் டைட்டானியம் வேரியன்ட்டினை பின்பற்றியதாக உள்ளது. ஏபிஎஸ், இபிடி, ரியல் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
100 ஹெச்பி குதிரைத்திறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 123 ஹெச்பி குதிரைத்திறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என இரண்டிலும் விற்பனைக்கு சிறப்பு ஈக்கோஸ்போர்ட் தன்டர் எடிசன் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டீலர்களை வந்தடைந்துள்ள தன்டர் எடிசன் விலை அடுத்த சில நாட்களுக்குள் அறிவிக்கப்படலாம்.