இந்தியாவின் முதல் காம்பாக்ட் எஸ்யூவி ரக மாடலான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி ரக மாடலில் தண்டர் எடிஷன் உட்பட விலை ரூ.14,000 முதல் ரூ.57,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வெளிவந்துள்ள ஈக்கோஸ்போர்ட் தண்டர் எடிஷன் மாடலில் தோற்ற மாற்றங்கள் மட்டும் பெற்றுள்ளது. மற்ற வேரியண்டுகளில் எந்த மாற்றங்களும் இல்லாமல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுள்ளதால் விலை குறைந்துள்ளது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
100 ஹெச்பி குதிரைத்திறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 123 ஹெச்பி குதிரைத்திறன் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என இரண்டிலும் விற்பனைக்கு சிறப்பு ஈக்கோஸ்போர்ட் தன்டர் எடிசன் கிடைக்க உள்ளது.
வெளிப்புற தோற்றத்தில் குறிப்பிடதக்க மாற்றமாக பானெட்டின் மேற்புறத்தில் மேட் கருப்பு நிறத்தில் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டு, பக்கவாட்டில் மேற்கூறை மற்றும் ஸ்பேர் டயர் உள்ள இடங்களில் இந்த ஸ்டிக்கர் காண கிடைக்கின்றது. இதில் 17 அங்குல அலாய் வீல், ஹெட்லைட், பனி விளக்கு அறை, முன்புற கிரில், ரூஃப் ரெயில் போன்றவற்றிலும் கருப்பு நிறம் சேர்க்கப்பட்டுள்ளது.
இன்டிரியரில், அப்ஹோல்ட்ரி புதுப்பிக்கப்பட்டு, டூயல் டோன் கேபின், 9.0 அங்குல ஃபுளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று சிங்க் 3, ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளை பெற்றதாக விளங்குகின்றது.
ஈக்கோஸ்போர்ட் தண்டர் எடிஷன் பெட்ரோல் மாடல் விலை ரூ.10.18 லட்சம் மற்றும் டீசல் மாடல் விலை ரூ.10.68 லட்சம் ஆகும் (எக்ஸ்-ஷோரூம் விலை).
Variant | New EcoSport |
1.5L TiVCT Petrol MT Ambiente | Rs 7.69 lakh |
1.5L TiVCT Petrol MT Trend | Rs 8.49 lakh |
1.5L TiVCT Petrol MT Titanium | Rs 9.28 lakh |
1.5L TiVCT Petrol MT Thunder | Rs 10.18 lakh |
1.5L TiVCT Petrol MT Titanium+ | Rs 10.18 lakh |
1.5L TiVCT Petrol AT Titanium+ | Rs 11.08 lakh |
1.0L TiVCT EcoBoost S | Rs 10.83 lakh |
1.5L TDCi Diesel MT Ambiente | Rs 8.19 lakh |
1.5L TDCi Diesel MT Trend | Rs 8.99 lakh |
1.5L TDCi Diesel MT Titanium | Rs 9.78 lakh |
1.5L TDCi Diesel MT Thunder | Rs 10.68 lakh |
1.5L TDCi Diesel MT Titanium+ | Rs 10.68 lakh |
1.5L TDCi Diesel MT S | Rs 11.33 lakh |