பிரீமியம் எஸ்யூவி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபோர்டு நிறுவனத்தின் எண்டோவர் ஸ்போர்ட் என்ற பெயரில் கூடுதலான சில மாற்றங்களை பெற்ற காரை ரூ.35.10 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
விற்பனையில் உள்ள டைட்னானியம்+ 4×4 வேரியண்ட் அடிப்பையில் தோற்ற மாறுதல்களை கொண்டுள்ள புதிய எண்டோவர் ஸ்போர்ட் வேரியண்டில் 2.0 லிட்டர் ஈக்கோ ப்ளூ பிஎஸ்6 என்ஜின் பெற்றுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 170 ஹெச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 10 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற காராக விளங்குகின்றது. 4×4மற்றும் 4×2 என இரண்டிலும் கிடைக்கின்றது.
இன்டிரியரில் எந்த மாற்றங்களும் இல்லை. மற்றபடி காரின் தோற்றத்தில் ஸ்மோக்டூ ஹெட்லைட், மூன்று ஸ்லாட் வழக்கமான கிரிலுக்கு மாற்றாக தேன்கூடு அமைப்புடைய கருப்பு நிறத்தை பெற்ற கிரில், கருப்பு நிற ஸ்கிட் பிளேட், கருப்பு நிற அலாய் வீல் என மிக நேர்த்தியாக அமைந்துள்ளது. எண்டோவர் ஸ்போர்டில் கருப்பு, சில்வர் மற்றும் வெள்ளை என மூன்று நிறங்கள் கிடைக்க உள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா ஃபார்ச்சூனர், மஹிந்திரா அல்டூராஸ் மற்றும் வரவுள்ள எம்ஜி குளோஸ்டர் போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது.