ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 42 சதவிகிதம் உயர்ந்து, 21 ஆயிரத்து 346 யூனிட்களாக உள்ளது.
இதுகுறித்து ஃபோர்டு இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 21 ஆயிரத்து 346 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதே காலகட்டத்தை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் விற்பனை 15 ஆயிரத்து 33 யூனிட்களாக இருந்ததது. மொத்தமாக உள்நாட்டு விற்பனை மூலம் 9 ஆயிரத்து 44 யூனிட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி விற்பனை 12 ஆயிரத்து 302 வாகனங்களாக உள்ளது. இதே கால கட்டத்தை ஒப்பிடும் போது 10 ஆயிரத்து 815-ஆக இருந்தது.
இதுகுறித்து ஃபோர்டு இந்தியா நிறுவன உயர்அதிகாரி அனுராக் மல்ஹோத்ரா தெரிவிக்கையில், ஃபோர்டு நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகளுடன் கூடிய கார்களை தொடர்ச்சியாக டெலிவரி செய்து வருகிறது. இதன் மூலம் எங்கள் நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது என்றார்.
கடந்த அக்டோபர் மாதத்தில், ஃபோர்டு இந்தியா, புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார்களை வெளியிட்டது. மேலும் ஏர்டெல் நிறுவத்துடன் இணைந்து பாதுகாப்பான டிரைவிங் நடைமுறைகளை இந்த விழாக்கால சீசனில் பிரபலபடுத்தி வருகிறது.