வருகின்ற பாரத் ஸ்டேஜ் 6 மாசு விதிகளுக்கு உட்பட்ட டீசல் என்ஜின் கொண்ட கார்களை விற்பனையை தொடர்ந்து மேற்கொள்வோம் என ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குனர் வினய் ரெய்னா பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம், ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் என்ஜின் உற்பத்தி நிறுத்தப்படுவதனால் சிறிய ரக டீசல் என்ஜின் கொண்ட மாடல்களை ஏப்ரல் 2020 முதல் கைவிடுவதாக அறிவித்துள்ளது.
ஃபோர்டு டீசல் என்ஜின் கார்
இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம், கார் விற்பனையில் மிக சிறப்பான பங்களிப்பினை டீசல் மாடல்கள் வழங்கி வருகின்றது. குறிப்பாக 1.5 லிட்டர், 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் என மூன்று விதமான டீசல் என்ஜின் பெற்ற கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது.
ஏப்ரல் 2020 முதல் இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ் 6 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்ட என்ஜின் கொண்ட கார்களை மட்டும் இந்தியாவில் இனி விற்பனை செய்ய இயலும். சிறிய ரக டீசல் என்ஜின்கள் பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றப்படும் போது விலை மிகப்பெரிய அளவில் உயரும் என்பதனால் வாடிக்கையாளர்கள் டீசல் கார்களை வாங்கும் நோக்கத்தை கைவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீபத்தில் மஹிந்திரா-ஃபோர்டு நிறுவனங்களுக்கிடைய ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் மூலம் முதல் எஸ்யூவி காரை அடுத்த ஆண்டின் மத்தியில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.