ஃபோர்டு நிறுவனம் தனது முதல் மஸ்டாங் காரை கடந்த 1964ம் ஆண்டில் தொடங்கி உலகம் முழுவதும் விற்பனையை தொடங்கியது. தற்போது இந்த நிறுவனம் தனது 10 மில்லியன்-வது மஸ்டாங் காரை தயாரித்துள்ளது’.
ஃபோர்டு நிறுவனத்தின் மஸ்டாங் கார், ஜிடி கன்வேர்டிபிள் பவ்ருடன், 460hp, 5.0 லிட்டர் V8, இத்துடன் 6-ஸ்பீட் மெனுவல் கியர்பாஸ் உடன் வெளியாக உள்ளது. மேலும் விம்பிள்டன் ஒயிட் நிறத்தில் பினிசிங் செய்யப்பட உள்ளது.
தனது 10 மில்லியன்-வது காரை தயாரித்து வருவதை கொண்டாடி வரும் ஃபோர்டு நிறுவனம், தனது பிளாட் ராக் தொழிற்சாலையில், பல்வேறு தலைமுறைக்காக தயாரிக்கப்பட்ட மஸ்டாங் கார்களை பேரணியாக அணிவகுக்க செய்ய உள்ளது. இந்த கார்களின் அணிவகுப்பு, டியர்போர்ன் முதல் பிளாட் ராக் வரையும், மேலும் இரண்டாம் உலக போர் காலத்தில் வெளியான P-51 மஸ்டாங் பைட்டர் பிளேன்-ஐயும் இதில் பங்கேற்க செய்துள்ளது.
இதுகுறித்து பேசிய ஃபோர்டு மோட்டார் நிறுவன உயர் அதிகாரி ஜிம் பார்லே, எங்கள் நிறுவனத்தின் இதயமும், ஆன்மாவும் மஸ்டாங் கார்கள்தான். இந்த கார்கள் உலகளவில் பிரபலமடைந்து உள்ளது. இந்த பேரணி தொடங்கியது, நானும் எனது முதல் காரான 1966 தயாரிக்கப்பட்ட மஸ்டாங் காரை ஒரு சிறுவன் போன்று ஒட்டி மகிழ்ந்தேன். இந்த மஸ்டாங் கார்கள், எந்த மொழியை சேர்ந்தவர்களின் முகத்திலும் புன்னகையை பூக்கவைக்கும்” என்றார்.